கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 19
சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஒரு ‘டிராலி ‘ வேண்டுமென்றால் 5 டாலரை இயந்திரத்துக்குள் போட வேண்டும். கடன் அட்டை மூலமும் செய்யலாம். ஒரு டிராலி மட்டும் எடுக்க வாகாக பிரிந்து நிற்கும். எங்களுக்கு பத்து நிமிடமாகியும் ‘லிப்ட்’ கிடைக்கவில்லை. எனவே படி வழி சென்றோம். மருமகனுக்கு ஐந்து டாலர் தண்டம். உடனே மனம் அதை டாலர் மதிப்பில் பெருக்கத் துவங்கியது. உண்மையில் இந்த அணுகுமுறை தவறு. அங்கே உள்ள விலைவாசி அல்லது டாலரின் வாங்கும் திறன் என் கணக்கில் இப்படித் தோன்றுகிறது. ஒரு டாலரால் நாம் இங்கே பத்து ரூபாய்க்கு வாங்குவதை வாங்க முடியும். இந்த அணுகுமுறை கிட்டத்தட்ட சரியாக இருக்கிறது.