அம்மணி திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு
லட்சுமி ராமகிருஷ்ணன் ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ என்னும் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்பவர் . அது போன்ற நிகழ்ச்சிகளின் விற்பனை யுக்தி எனக்கு மிகவும் அசூயை அளிக்கும் மலினமானது. விமர்சனம் திரைப்படம் பற்றித்தான். எனவே இதை விட்டு விடுவோம்.
14 மணிநேர விமானப் பயணம். தேடித் தேடி இந்தியப் படங்களில் இது கிடைக்கவே பார்த்தேன். படத்தின் கதை மிகவும் பழமை நோக்குள்ளது. ஒரு பெண்மணி முதலில் பெரிய குடும்பத்தைப் பேணுகிறார். அவர்கள் தன்னலம் புரிந்ததும் ஒரு ஆசிரமத்தில் தொண்டுப் பணி ஏற்கிறார்.
இருந்தாலும் எனக்கு படத்தின் ஒரு முக்கிய அம்சம் மிகவும் பிடித்திருந்தது. லட்சுமி எவ்வாறு மிகவும் யதார்த்தமாய் வறியவர்கள் வாழ்க்கையைச் சித்தரித்தார் ? மருத்துவ மனையின் கடைநிலை ஊழியர்கள் நிலையாகட்டும், அல்லது ஒற்றை அறையில் ஒடுங்கும் வாரியாரின் வாழ்க்கை ஆகட்டும் மிகவும் யதார்த்தமாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். மிகை நடிப்பில்லாமல் , பல கதாபாத்திரங்கள் உயிர் பெற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்தால் லட்சுமி தமது இயக்கும் திறமையில் மேலும் பல வெற்றிகளை அடையலாம்.
(image courtesy:inidaglitz.com)