அசோகமித்திரன் பற்றி ஆர். அபிலாஷ்


img_20161023_181921854

அசோகமித்திரன் பற்றி ஆர். அபிலாஷ்

அபிலாஷ் அசோகமித்திரன் பற்றி உயிர்மையில் எழுதியதை நான் இப்போது தான் அவரது இணையதளத்தில் படித்தேன். அதற்கான இணைப்பு ——————- இது.

இந்திய இருத்தலியல் ( Indian Existentialism ) என்ற ஒன்றை நாம் அசோகமித்திரன் படைப்புக்களில் காண்பதாக அபிலாஷ் பதிவு செய்கிறார். இது முற்றிலும் புதிய படைப்பு முறை (genre). இருத்தலியல் பற்றி அசோகமித்திரன் ‘கரைந்த நிழல்கள்’ நாவலின் முன்னுரையில் குறிப்பிடுவார். அது மேற்கத்திய இருத்தலியலிலிருந்து வித்தியாசமானது என்கிறார் அபிலாஷ். அன்றாட வாழ்க்கையின் போராட்டங்களே அசோகமித்திரன் படைப்புக்களில் , குறிப்பாக சிறுகதைகளில் மையப் படுத்தப்பட்டன. நாவல்கள் தத்துவார்த்தம் (மானசரோவர்) மற்றும் சமூக சறுக்கல்கள் (தண்ணீர், ஒற்றன், பதினெட்டாம் அட்சக் கோடு) மையமானதாய் நான் கண்டேன்.

நுட்பமான உள்ளடக்கமும் அதை வாசகர் எளிய நடையில் வாசிப்பதும் அவரது தனித்தன்மை. நாம் அன்றாட வாழ்வில் சின்னஞ்சிறிய அற்பமான விஷயங்களில் கவனம் செலுத்தும் கட்டாயம் உள்ளவர்களே. பெரிய திட்டங்கள், ஏற்பாடுகள் அரிதாகவே தேவை. அவற்றை நிறைவேற்றவும் அன்றாட நடவடிக்கைகளை சீராகச் செய்யவும் நாம் மெனக்கெட்டுத்தான் தீர வேண்டும். ஆனால் மனித மனத்தின் இயல்பு இயந்திர வாழ்க்கையினின்று தற்காலிக விடுதலைகளைத் தேடுவது. முடிவில் நிரந்தரம் மற்றும் நிரந்தரமின்மையைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்கு நாம் நகருகிறோம்.

அபிலாஷ் அசோகமித்திரனுடனான சந்திப்புக்களைக் குறிப்பிடும் போது “என்னை எதற்கு சந்திக்க முடிவு செய்தீர்கள்?” என அசோகமித்திரன் வினவினாலும் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலில் வரும் யமுனா போல அது எதிர்ப்பொருள் கொண்டது என்கிறார். அதாவது அசோகமித்திரன் தமது சமகால எழுத்தாளர்களை சந்திக்கவே மிகவும் விரும்பியவர் என்ற பொருளில். அசோகமித்திரனுடன் என் சந்திப்புகள் பொதுக் கூட்டங்களில் தான். அவர் பதில் சொல்வதும் உரை நிகழ்த்துவதும் அங்கதம் நிரம்பி இருக்கும். அதனுள் நம்மைக் கட்டுப்படுத்தும் விளிம்புகளை நினைவு படுத்துவதாகவும்.

தனிப்பட்ட வாழ்வில் அவர் எழுத்து மட்டுமே தொழில் என முடிவு செய்தது அவர் வாழ்க்கையை மிகவும் தெளிவாக அணுகியதையே காட்டுகிறது. ஒரு நடுத்தரக் குடும்பம் எழுத்தாளரை நம்பி இயங்கியது பெரிய சவால். அவர் தம் வாழ்க்கையின் போராட்டங்களைப் பணம் தீர்க்கும் என எண்ணவில்லை. இது நமக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் மிகத் தெளிவான செய்தி.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s