ஆத்திரமும் பதட்டமும் உண்டாக்குவோரை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் ? – காணொளி
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மட்டையாளர் அல்லது பந்து வீச்சாளரை ஆத்திரமூட்டி நிலைகுலையச் செய்யும் மோசமான திட்டம் ஓன்று உண்டு. பல வீரர்கள் அதில் உணர்ச்சி வசமாகி தோல்வி அடைவார்கள். நிஜ வாழ்க்கையிலும் ஒருவர் நம்மைப் பதட்டப் படுத்தும் போது நாம் அதை உள்வாங்கி அந்த ஆளின் அரசியல் நடவடிக்கையைப் புரிந்து கொண்டு நிதானமாக நமது வழியில் மேற்செல்ல வேண்டும். அவரது சதிக்கு பலியானால் வெற்றி அந்த அற்பமான திட்டத்துக்கே. இந்த உரையில் அது அழுத்தமாகத் தரப்பட்டிருக்கிறது. பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.