அனாதைக் குழந்தைகளின் விடிவெள்ளி சிந்துதாய் அம்மையார் – காணொளி
புனேயில் ஆண் குழநதைகளுக்கு இரண்டு மற்றும் பெண் குழநதைகளுக்கு இரண்டு என நான்கு அனாதை ஆசிரமங்களை நடத்துகிறார் சிந்துதாய். தற்போது எழுபது வயதாகும் இவர் கணவரால் கைவிடப்பட்டு வறுமையில் போராடியவர். இன்று இவரது குழந்தைகளும் இவரோடு இணைந்து பாடு படுகிறார்கள். சமூக நலனுக்காக எந்த முயற்சி எடுத்தாலும் அது கொச்சைப் படுத்தப்படும். அரசியல் தலையீட்டையும் , பல சமயம் சமூக விரோதிகள் தொல்லையையும் எதிர் கொள்ளவேண்டி வரும். படிப்பறிவில்லா சிந்தூதாய் அம்மையார் 18 வயது கடந்தாலும் வேலை அல்லது திருமணம் என்னும் நிலையைத் தாண்டும் வரை அனாதைகளைப் பராமரிக்கிறார். அரசு உதவி இல்லாமல் நல்லிதயங்களின் நன்கொடையை வைத்தே நான்கு இல்லங்களை அவர் நடத்தி வருகிறார். மிகவும் பாராட்டுக்குரிய பணி. பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.