குழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து
வின்சென்ட் என்னும் சேவை மனப்பான்மை கொண்ட நேயர் பற்றிய தமிழ் ஹிந்து பதிவுக்கான இணைப்பு — இது.
பகலெல்லாம் கடுமையாக உழைத்தாலும் மாலையில் கல்வி அறிவை , டைல்ஸ் கடை வைத்திருக்கும் வின்சென்ட் இடமிருந்து பெறுகிறார்கள் குழந்தைகள். என்றும் இதே நிலை நீடிக்காமல் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு வாய்ப்பு. வின்சென்ட் போன்ற அரிய நல்லிதயங்கள் மனித நேயம் மரிக்கவில்லை என்பதற்கு அடையாளம். நன்னம்பிக்கை நமக்கு இவர்களால் ஏற்படுகிறது.
குழந்தைத் தொழிலாளி என்று ஒருவர் இருக்கவே கூடாது என்றால் நாம் சமூகத்தின் , குறிப்பாக ஏழை எளியோரின் கட்டாயங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றே பொருள். குழந்தைத் தொழிலாளிகள் பற்றிய எனது கதை தீரா நதியில் வெளிவந்தது. அதற்கான இணைப்பு —இது.
(image courtesy:tamil.thehindu.com)