‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை
என் வயது மற்றும் ரசனைக்கு, தொலைக்காட்சியில் கூட ‘நெர்வ் ‘ ஆங்கிலப்படத்தை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 14 மணி நேரம் (சிக்கன இருக்கை) பயணத்தை அமெரிக்காவில் இருந்து நாம் செய்யும் போது ஒரு படமாவது பார்த்துத்தான் தீர வேண்டும். அப்படித்தான் நான் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
படம் மிகவும் திடுக்கிடவும் , விடலைக் குழந்தைகள் பற்றி கவலை கொள்ளவும் வைப்பது. நிழல் இணைய உலகம் என ஓன்று இருக்கிறது என்கிறார்கள். அதில் நுழைவதை அறிந்த இளைஞர்கள் பல விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட முடியும். இந்தப் படத்தின் விளையாட்டு விதிகளைக் காண்போம்:
1. விளையாடுபவராகவோ அல்லது வேடிக்கை பார்ப்பவராகவோ (Players or Observers ) ஒருவர் இதில் ஈடுபடலாம்.
2.ஒருவருக்கு என்ன சாகசம் செய்ய வேண்டும் என்னும் கட்டளை வரும். அதை நிறைவேற்றினால் ஒரு தொகை வங்கிக் கணக்கில் சேரும். அதற்கு அடுத்த நிலையில் இன்னும் அதிகம் அதாவது கணிசமாக அதிகம்.
3.ஒருவர் தான் நினைக்கும் போது நின்று விட , அதாவது விளையாட்டை விட்டு விலகி விட முடியாது. அதற்கு வேறொருவரை அதில் சேர்த்து விட்டால் விலகிக் கொள்ளலாம்.
4.வேடிக்கை பார்ப்போரின் ஆதாரவைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி முடிவு செய்யப்படும்.
அப்படி என்ன சாகசம் என்கிறீர்களா?
1.நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை ஒரு துணிக கடையில் திருட வேண்டும்.
2. மற்றொரு பெண்ணுக்கு 100 அடி உயரமான இரு கட்டிடங்களுக்கு நடுவே கம்பி மீது நடக்கும் சாகசம்.
3. இளைஞன் கண் கட்டப்படும். அவன் பின்னாடி இருக்கும் பெண் காட்டும் வழிப்படி அவன் 80 கிமி வேகத்தில் சுறுசுறுப்பான சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும்.
4.ஒரு சிறுமி முன்பின் அறியாத ஆளுக்கு முத்தம் கொடுக்க வேண்டும்.
இப்படி விபரீதமான கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும். நண்பனை சுட்டு விடு என்னுமளவு அது போகும் . பாதி விளையாட்டிலேயே கதாநாயகி சிறுமி தனது தாயின் வங்கிக்கணக்கில் தான் விளையாடி வென்ற தொகை மட்டுமல்ல , கணக்கில் வெகு நாட்களாய் இருந்த தொகையும் பறி போன பின் விழித்துக் கொள்கிறாள். ஆனால் அவளுக்கு ஆட்டத்தை விட்டு விலக அனுமதியில்லை. காவல்துறையால் இந்த விளையாட்டை நிறுத்த இயலவில்லை. இறுதியில் பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக இந்த விளையாட்டின் போக்கைத் தடை செய்யும் உரிமையைப் பயன்படுத்தி அந்த விளையாட்டின் இணைய செயற்பாட்டையே நிறுத்துகிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது.
அற உணர்வு, இங்கிதம், குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமை எதுவுமே இல்லாத குரூரம் மிக்க விளை யாட்டுக்கள் இணையத்தில் உலா வருகின்றன என்பது , பெற்றோரும் அரசுகளும் விழிப்பாய் எதிர் கொள்ள வேண்டிய விஷயம்.
இரண்டு மாதம் முன்னர் இந்தப் படத்தைப் பார்த்த போது இது வேற்றுக் கற்பனை என நினைத்தேன். பின்னர் செய்திகள் மூலமாக , இப்படி ஒரு நிழல் இணைய உலகம் சிறுவர் சிறுமியருக்குத் தவறான பாதை காட்டுவது பற்றி அறிந்தேன். அதனாலேயே இந்த எச்சரிக்கை.
(image courtesy:wiki)
already Kerala suffering from these games….soon TN also. we cannot escape…..
everybody playing with brain easily. it is like Psycho doctor providing treatment to patient. unfortunately here our self tuning our brains against normal thinking and we do not know how to come out. smart phones with internet equal to land mine we do not know when it is going to burst. but it will burst.