வள்ளலார் பற்றி பிரபஞ்சன்
தமிழ் ஹிந்துவில் வள்ளலார் பற்றிய பிரபஞ்சனின் கட்டுரைக்கான இணைப்பு —————————–இது.
சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் வழி செக்கு மாட்டு போல உழல்வதைத் தாண்டி, தேடலோ சிந்தனையோ தேவையில்லை என்பதே வைதீக மதம் எனப்படுவது. இது மாதங்கள் மற்றும் வரிசையான மடாதிபதிகள் வழி ஒரு பாரம்பரியத்தைத் தக்க வைப்பதைத் தாண்டி ஆன்மிகம் என்னும் வெளிக்கு நகர விரும்பாத தணடவாள சிந்தனை முறை.
சைவ மதம் இருக்கும் .அத்வைதம் பற்றிய விவாதங்களை அது ஊக்குவிக்காது. வைணவம் விசிஷ்டாத்வைதம் பற்றி அடிப்படை அறிவு வேண்டாம்- என்றே உருவ வழிபாட்டை, மற்றும் சடங்குகளைப் பற்றி மட்டுமே பேசும். இந்த வைதிக மதங்களை விட்டு ஆன்மீக வழியில் மக்கள் விழிப்புற மேற்கொள்ளப்பட்ட ஆகச் சிறந்த முயற்சி புத்தரின் வழிகாட்டுதல். அவரின் மார்க்கம் வைதீகத்துக்கு ஆபத்து என்றே அவரது சீடர்களை வெளி நாட்டுக்கு வழியனுப்பினார்கள் வைதீக மதவாதிகள்.
தமிழ் நாட்டில் பெரியார் காலத்துக்கு முந்தையவரான வள்ளலார் ஆன்மீகவாதியாய், கடவுளை ஜோதி வடிவத்தில் காண்பவராய் , வைதீக மதத்துக்கு மாற்றைக் கொண்டு வந்தவர். ஜாதிவெறியைத் தாண்டி, ஞானநெறியையே மையப்படுத்திடுவோம் என்னும் செய்தி கொண்டுவந்தவர்.
அவரின் பாதை ஆன்மீகத்தில் ஞானத் தேடலில் ஒரு முன்நகர்வு. இது நடந்து கொண்டே இருக்கும். தேடல் உள்ளவர்களுக்கு இந்த முன்னகர்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் அசல் சிந்தனையாளர்கள் தென்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
ஆன்மிகம் தேடல் மட்டுமே. உபதேசங்களில் சடங்குகளிலும் ஒளிந்திருப்பதல்ல.
(image courtesy:youtube)