ஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை
மதம் என்பது பிறப்பாலன்றி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் ஏசுதாசுக்கு திருச்சூரில் அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மேரி மாதா மற்றும் ஏசுபிரான் மீது எந்த அளவு உள்ளவரோ அதே அளவு அய்யப்பன் மற்றும் கிருஷ்ணர், விஷ்ணு ஆகிய ஹிந்துக் கடவுள்கள் மீதும் பக்தி உள்ளவர். சர்ச்சை மற்றும் தகராறு இவற்றைத் தவிர்த்து அவர் இந்த இரு மதப் பாலம் போன்ற வழிபாட்டைப் பலகாலமாகத் தொடரந்து வருகிறார். பத்மநாத சுவாமி கோயில் நிர்வாகம் சரியான திசையில் சிந்தித்துள்ளது. பாராட்டுக்கள். மத நல்லிணக்கம் என்பது ஒரு நாளில் நிகழாது. பல அமைப்புக்கள் மற்றும் நல்லிதயங்கள் காட்டும் முன்னுதாரணம் மட்டுமே அதற்கு வழி செய்யும்.
(image courtesy:youtube)