(ஆணின் ) விருப்ப ஒய்வு தற்கொலையா? – பகுதி -4


 

Image result

(ஆணின் ) விருப்ப ஒய்வு தற்கொலையா? – பகுதி -4

தனக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க விடாமல் ஒருவரை அழுத்துவது குடும்பமும் சுற்றமுமே. மனைவிக்கு, தன் குடும்பத்தில் தான் பார்த்த உறவினர் செய்து வந்த கௌரவமான வேலையை மட்டுமே கணவனும் குழந்தைகளும் செய்ய வேண்டும். புதுமை செய்கிறேன், பரிட்சை செய்து பார்க்கிறேன் என ஆண்கள் கிளம்பக் கூடாது.

‘குழந்தைகளுக்காகப் பெற்றோரும், பின் காலத்தில் பெற்றோருக்குக்காகக் குழந்தைகளும் எந்தத் தியாகமும் செய்ய வேண்டும்’ என்ற மையக் கருத்தில் இந்திய மொழிகளில் கண்டிப்பாக நூறு படங்களுக்கு மேல் வந்திருக்கும்.

சுதந்திரப் போரில் நமக்குத் தெரிந்த வ உ சிதம்பரனார் ஆகட்டும் இன்னும் தெரியாத எத்தனையோ பேராகட்டும் அவர்கள் குடும்பத்துக்காக நாட்டைத் தியாகம் செய்கிறேன் என்று உட்கார்ந்திருந்தால் இன்று நாம் அடிமைகளாகவே இருந்திருப்போம். புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகள் தன் குடும்பத்தை அல்ல, இலக்கியத்தைப் பேணியவர்கள்.

இரண்டு போலித்தனங்களை நாம் ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும். ஒன்று மிகைப் படுத்தப் பட்ட அம்மா. மிகவும் மிகைப்படுத்தப் பட்ட அம்மா. மிகவும் கொச்சைப் படுத்தப் பட்ட அப்பா. இரண்டாவது குடும்பம் என்பது தன்னலமே இல்லாத பந்தங்கள் உறையும் ஒரு கூட்டுப் பறவைகளின் கூடு என்னும் மிகை.

அபத்தமான உளறல்களால் நாம் ஒருவரை ஒருவர் மூச்சு முட்டச் செய்து கொண்டிருக்கிறோம். வளரும் போதே ஏதோ ஜல்லிக்கட்டுக்காகக் காளையை வளர்ப்பது போல “நீ தான்ப்பா அப்பாம்மாவைப் பாத்துக்கணும்” என்று ஒரே அழுத்தம்.

புனேயிலோ அல்லது புது டெல்லியிலோ அவன் இரவு பகலாக வேலை பார்ப்பான். பெற்றோரையும் பார்த்துக் கொள்வதும் சேர்ந்தால் அவன் சீக்கிரமே தளர்ந்து விடுவான். தன்காலில் நிற்கும் மக்கள். அவர்களே வலிமையான குடும்பம் மற்றும் சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆணோ பெண்ணோ எந்த வயதானாலும் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கத்தான் வேண்டும். நான் சொல்லுவது ஊக்கத்தின் நிமிர்வு. உடலின் அல்ல. வேலைக்குப் போகும் பெண் தன் குழந்தையைக் காப்பகத்தில் விட்டுவிட்டுப் போனால் நாம் முகம் சுளிக்கிறோமா? அது நல்லது தானே. அதேதான் ஒரு மகனுக்கும். அவன் வேலைப்பளு தாளாவிட்டால் ஏன் அவன் பெற்றோரை நல்ல சூழலும் கவனிப்பும் உள்ள காப்பகங்களில் விடக் கூடாது?

குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சுமக்கும் ஒரு அரிசி மண்டி அல்ல. குடும்பம் ஒருவர் தனது சொந்தங்களை அங்கீகரிக்கும் அமைப்பு. அது பரஸ்பரம் சுதந்திரம் மற்றும் மரியாதை கொடுக்குமளவு இனிய சோலை போல இருக்கும். ஒருவரை ஒருவர் அழுத்தி, சேவையைக் கட்டாயமாக்கும் போது அது சிறைக்கூடமே.

சமூகத்தின் எந்த இடத்திலும் இருக்கும் சுய நலமே குடும்பத்துக்குள்ளும் தெனபடுகிறது. அது தவிர்க்க இயலாதது. அதே சமயம் மிகையாக இல்லாமல் ஒருவருக்கொருவர் உடல் நலமின்மை அல்லது இழப்பு போன்ற தருணங்களில் ஆதரவு கொடுத்து, பிற நாட்களில் சுதந்திரக் காற்றை அனுமதிக்க வேண்டும்.

நான் இந்தத் தொடரில் கூறிய எதுவுமே நான் என் வாழ்க்கையில் செயற்படுத்தாதவை அல்ல. எனக்குத் தந்தை என்னும் மகிழ்ச்சியும் நிலையும் தந்த இரு குழந்தைகளுக்கும் நான் தான் நன்றிக் கடன் பட்டவன். அவர்கள் என்னைப் பார்த்துக் கொள்ளாவிட்டாலும் அவர்களை நான் நேசிப்பேன். அவர்கள் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களை வளர்க்கவில்லை. இயல்பான, ஆழமான தந்தைப்பாசத்தால் மட்டுமே வளர்த்தேன்.

“உன் எதிர்காலத்துக்கு நிறைய சேமி. எல்லாவற்றையும் குழந்தைகளிடம் தந்து விடாதே’ இந்த அறிவுரை வாட்ஸ் அப்பில் வராத வாரம் ஒன்று உண்டா? ஒருபக்கம் இப்படி அறிவுரை. மறுபக்கம் இளைஞர்களின் தலையாய பிரச்சனைத் தன் துறையில் சாதிப்பதல்ல. தாய்தந்தையுடன் கிராமத்து வீட்டில் அல்லது நகரத்துக் கூண்டில் எம்ஜியார் பாட்டுப் பாடுவது என்பது ஏற்கவே முடியாதது.

சாதிக்க ஊக்குவிக்கும் குடும்பம், நட்பு, சுற்றம் இவையே ஒருவனுக்கு வேண்டும். உணவு, உடைகள், இவற்றில் ஏகப்பட்ட வகைகள் இவை தவிர்த்து வேறு என்ன இருக்கிறது இன்று சமூகத்தில் ஒருவர் மற்றொருவருக்குச் சொல்ல? உயர்ந்த கனவுகளைச் சுமக்கவோ அல்லது பகிரவோ நாம் முனையவே இல்லை. என்ன கனவுகள் அவை?

தனது துறையில் சாதிக்கும் கனவு, தனது சமூகம் மேம்படும் கனவு, தனது குடும்பத்தினர் கல்வியில் என்றும் கருத்தாயிருந்து எந்த வயதானாலும் கற்றுத் தேரும் அரிய கனவு இவைகளே உயர்ந்த எண்ணமுள்ள மனப்பாங்கின் அடையாளம்.

பணம், பொருளாதார வலிமை மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாக என்றுமே இருக்க முடியாது. சாதனை என்பது பண வலிமை அல்ல. புதிய தடத்தில், புதிதாய்க் கொப்பளித்த சிந்தனையில் ஒரு துறையில் முத்திரை பதிப்பதே சாதனை. சாதிக்கும் தனிமனிதன், அவனைச் சுதந்திரமாகச் சாதிக்க விட்டுவிடும் குடும்பம் ஒன்றே நாட்டின் உயர்வுக்கு வழி.

அப்படியானால் குடும்பத்தில் ஒட்டுறவு, பாசம், பந்தம் எதுவுமே கூடாது என்கிறேனா?

அடுத்த பகுதியில்…..

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s