(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா?- பகுதி -5


Image result for depression images

(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா?- பகுதி -5

சென்ற பகுதியின் முடிவில் “அப்படியானால் குடும்பத்தில் ஒட்டுறவு, பாசம், பந்தம் எதுவுமே கூடாது என்கிறேனா? ” என்ற வினாவுடன் முடித்திருந்தேன்.

நாம் அன்பை இயல்பாக நம்மையும் மீறியே எப்போதும் வெளிப்படுத்துவோம். அதன் மீது எதிர்பார்ப்பின் நிழல் படியும் போது அன்பு களையிழக்கிறது. அடக்குமுறையின் அதிகார வெறி அதன் மீது ஏறிக் கொள்ளும் போது அது குரூரமாகவும் ஆகி விடுகிறது. பழங்காலம் முதல் இருந்து வரும் சுதந்திர சிந்தனையை நசுக்கும் போக்கை நாம் அன்போடு சேர்த்தே பார்க்கிறோம். அன்பு இயல்பாக, நாம் அன்பு செலுத்துபவரின் சொரணைகளை மதித்து, அவரின் சுதந்திர சிந்தனைக்கு இடம் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே தூய அன்பு. அடங்கி நடக்க வேண்டும் என்றோ, எனக்கு நீ பயன்பட வேண்டும் என்றோ எதிர்பார்ப்போடும், பல தலைமுறைகளாய், இளைய தலைமுறைகளை அடக்கி உருப்படாமல் செய்த , மூர்க்கத்தனத்தைக் கையாளும் பட்சத்திலோ, நம் அன்பு மாசடைந்த ஒன்றே.

பதின்களில் உடல் மற்றும் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வதும் , இருபது வயது நெருங்கும் போது, எதிர்காலம் பற்றிய கவலையும் அச்சமும் இளைஞர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகின்றன. நாம் அவர்களை நமது தாத்தா காலத்து அணுகுமுறையில் மேலும் காயப்படுத்துகிறோம்.

ஒருபக்கம் தேவைக்கு அதிகமான அக்கறை மறுபக்கம் முற்றிலும் தவிர்க்க வேண்டிய அடக்குமுறை. இவை இரண்டும் பல இளைஞர்களைத் தற்கொலைக்கே தள்ளுகின்றன. குழந்தை வளர வளர, தனக்கு நல்லது எது தீயது எது என்பதை நாம் அன்பாகச் சுட்டிக்காட்டி, அடக்குமுறை இன்றி அவர்களின் போக்கை கவனித்து வந்தாலே போதும்.

குறிப்பாக வீட்டின் வாரிசான ஆண் இளைஞன் அவன் தந்தைக்கு இணையான அளவு குடும்பத்தின் பொருளாதாரம் பற்றிய அழுத்தங்களுக்கு ஆளாக்கப் படுகிறான். அவன் கண்டிப்பாகத் தன் வருமானத்தில் ஒரு பகுதியை, குடும்பத்துக்கு அத்தியாவசியத் தேவை அல்லது கடன் இருக்கும் பட்சத்தில் தரக் கடமைப்பட்டவனே. ஆனால் அதை அவன் தனக்குப் பிடித்த வேலையில் கால் ஊன்றும் வரை நாம் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பது அவனது நிம்மதியை உருக்குலைக்கும்.

நடுவயதிலோ அல்லது ஐம்பது கடந்த பின்னரோ ஒரு குடும்பத் தலைவன் தனது பணியிடத்தில் அவமானமோ அல்லது முறைகேடுகளோ, அதைத் தாங்க முடியாமல் வேறு வேலையோ தொழிலோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கிளம்பினால், மறுபடி அவர் காலூன்றும் வரை அவருக்காத் தியாகங்களைச் செய்ய, தற்காலிக வருமான இழப்பை அல்லது அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ள மொத்தக் குடும்பமும் தயாராக இருக்க வேண்டும்.

கசப்பான உண்மை அதற்கு அனேகமாக எந்தக் குடும்பமுமே தயாரில்லை என்பதே.

குடும்பம் இப்போது தன்னலமும், சமூக அந்தஸ்துக்கான ஒரு சின்னம் அது என்னும் குறுகிய நோக்கும், ஆண் எப்படியும் வசதிகளை உறுதி செய்தே தீர வேண்டும் என அவன் மீது அழுத்தம் கொடுக்கும் குரூரம் மிகுந்ததாக ஆகி விட்டது. அதானாலேயே சமூகம் விருப்ப ஓய்வைத் தற்கொலைக்குச் சமமாகப் பார்க்கிறது.

அன்பு என்பது நாம் நேசிப்பவரின் கஷ்ட நஷ்டங்களை, அவரிடத்தில் நம்மை வைத்துப் பார்க்கும் பரிவுடன் சேர்ந்தே இருக்க வேண்டும். அப்போது மட்டுமே ஒன்றாயிருந்த காலம் என்றும் மனதுக்குள் மாறா இனிய நினைவுகளாய் வாழும்.

எந்த மகன் மீது அக்கறை அதிகமோ, எந்த மகள் பற்றிய கவலை அதிகமோ அவர்களை மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்கு உள்ளாக்கி, பல கசப்பான அவமரியாதையான நிகழ்ச்சிகள் இல்லங்களுக்குள் அரங்கேறி என்றும் ஆற்ற முடியாத காயங்களை எல்லோர் மனமும் தாங்கி வருவது இன்று அதிகரித்து வருகிறது.

மகனுக்கும் மகளுக்கும் நல்ல உரையாடல் வழி சுதந்திரம் தந்து அவர்களது மனத்தினுள் உள்ள வலிகளை, அச்சங்களைப் போக்கும் முதிர்ச்சி பெற்றோரிடம் இல்லை.

அந்த முதிர்ச்சி எந்தக் கடையில் கிடைக்கும்?

அடுத்த பகுதியில் ….

(image courtesy:everydayhealth.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s