சமீபத்தில் எஸ்.ராவின் இரண்டு சிறுகதைகள் அவரது இணையதளத்தில் வெளி வந்துள்ளன.
‘முதல் காப்பி’ – கதைக்கான இணைப்பு—– இது
‘வெறும் பணம்’ கதைக்கான இணைப்பு——- இது.
நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கதைகளிலும் மனித உறவுகளைப் பேணுவது என்னும் விழுமியம் முன் வைக்கப்படுகிறது.
எனது விமர்சனம் இது:
1.கோகிலா மற்றும் மொய்தீன் வழியாக ஆசிரியர் தென்படுகிறார். சற்றே லட்சியவாதமானவராய் அந்த இருவரும் மையப்படுகிறார்கள்.
2. விடை தெரியாத கேள்வி எதுவும் இல்லை. ஆனால் முந்தைய தலைமுறை மனித உறவுகளைக் கொண்டாடியது. இந்தத் தலைமுறை அப்படிச் செய்யவில்லை என்னும் பொத்தாம் பொதுவான ஒரு அவதானிப்பு அடி நாதமாய் இரண்டு கதைகளிலும் வருகிறது.
3. உணவு வழங்குவது கடையோ தனி ஒரு பெண்ணோ அதில் ஒரு ஒட்டுதல் உண்பவருக்கு வந்து விடுகிறது என்னும் ஆசிரியரின் குரல் நுட்பமாக இல்லாமல் நேரடியாகவே வெளிப்படுகிறது.
எஸ்.ராவின் வீச்சு இந்தக் கதைகளை விடவும் நுட்பமானதும் விரிந்ததும். நாம் நிறையவே வாசிக்கப் போகிறோம் அவரிடமிருந்து.