Monthly Archives: October 2017

என் தோட்டத்தில் ஓர் அதிசயம்


என் தோட்டத்தில் ஓர் அதிசயம் வெள்ளைச் செம்பருத்தி வைத்து இரண்டு வருடம் ஆகப் போகிறது. நடு நடுவே சில சமயம் பூக்காது. அவ்வளவு தான். ஆனால் இன்று ஒரு வெளிர் சிவப்பு மொட்டு வந்து பூத்தும் விட்டது. இது எப்படி சாத்தியம்? எனக்கு அதிசமயாக இருக்கிறது. இல்லை இது சகஜமப்பாவா? அப்படித் தோன்றவில்லை. விவரம் தெரிந்தவர்கள் எனக்கு … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 9


(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 9 வாழ்க்கையின் லட்சியம் என்ன ? என்னும் கேள்வியுடன் சென்ற பகுதி முடிந்தது. மிகவும் லட்சியவாதமான, தத்துவார்த்தமான பதிலே அனேகமாக நான் படிப்பவை. உண்மையில் வாழ்க்கையின் லட்சியம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதே. மிகவும் எளிய பதிலா இது? விழுமியங்களுக்கு முரணான ஒன்றா இது? ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? -பகுதி 8


(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? -பகுதி 8 பணியில் மனநிறைவு என்பது புழக்கத்தில் இல்லை; ஒரு இலக்காக இல்லை; வெறுமனே அகராதியில் மட்டுமே இருக்கிறது. முதலில் மாத சம்பளப் பணிகள் பல இயந்திரத்தனமானவை. அவற்றை ஒரு ‘ரோபோ’ எனப்படும் இயந்திர மனிதன் செய்வதே பொருத்தமானது. புதுமைகள் அல்லது பரிட்சார்த்தமான முயற்சிகள் இவை கடுமையாக சாடப்பட்டு அடக்கி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

கிழக்கு பதிப்பக வெளியீட்டில் என் இரண்டு நாவல்கள்


முள்வெளி  (நாவல்) அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டால் அது ஒருவரின் சின்னஞ்சிறு உலகம்.  அண்டசராசரம் என்பது பிரம்மாண்டம். மானுடம், உயிரினங்கள்,பிரபஞ்சம் யாவற்றின் இயங்குதலில் பொதுவாக இருப்பது காலம் ஒன்றே.  அதை அளக்கும் கடிகார முட்கள் நம்மை இயக்குபவை என்பதுமாயைதான்.  ஆனால் அந்த முட்களின் இடைப்பட்ட ஒரு வெளியான வாழ்க்கையின் போராட்டம், புதிர்கள் நவீன இலக்கியத்தின்மையமாகின்றன‌.  மனவெளியையும் புற உலகையும் பிரிக்கும் மிக மெல்லிய திரை விலகும் விபத்தை எதிர்கொள்ளும்  ஒரு படைப்பாளியின்மன அழுத்தம் ஒருபக்கம், நாணயத்தின் மறுபக்கமான‌ அவனது கதாபாத்திரங்கள் சமகால வாழ்வின்  விடையில்லாக் கேள்விகளைஎதிர்கொள்ளும் சித்தரிப்பு இந்தப் புதினம். சத்யானந்தனின் மூன்றாவது நாவலான முள்வெளியில் கவிதை,  சிறுகதை, நாவல் என்னும் மூன்றுவடிவங்களும் சங்கமிக்கின்றன‌.    போதிமரம்– சரித்திர நாவல் புத்தரின் மரணத்துக்கான பழியை ஒரு ஏழை மீது போட்ட வரலாற்றை மாற்றி எழுதுமளவு கற்பனையின் வீச்சு  வெளிப்படும் சரித்திரப்புனைவுபோதி மரம். புத்தரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரடாகக் கொண்டு பின்னப்பட்ட  இந்நாவலில் சுத்தோதனர், யசோதரா, ஆனந்தன்இவர்களின் ஆளுமைகள்  கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றன.  புத்தரின் ஞானத்தேடல் நிகழ்ந்த காலகட்டத்தை அவர் பூரண ஞானம்பெற்ற பரிணாமத்தை கற்பனை செய்யும் பெருமுயற்சியில்  நாவல் வெற்றி கண்டுள்ளது.இது சத்யானந்தனின் நான்காம் நாவல். இந்த நாவல் ஏன் புத்தரது வாழ்க்கையின் கதை வடிவமில்லை? அது ஏன் நாவல்?  இந்தக் கேள்விக்கான விடை ஒரு ஆவணப்படத்தையும்  திரைப்படத்தையும் எது வேறுபடுத்துகிறது என்னும் கேள்விக்கான விடையில் பொதிந்திருக்கிறது.  ஆம். கற்பனையும் கலையுமே அந்த வேறுபாடு. இந்த இரண்டு நாவல்களையும் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள          முகவரி: 177/103, First Floor, Ambal’s Building … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment

முப்பரிமாண ஓவியக் கலை – காணொளி


முப்பரிமாண ஓவியக் கலை – காணொளி ஓவியக் கலைஞர்கள், இரண்டு கட்டிடங்கள், மனிதர்கள் அல்லது பொருட்கள் எந்த அளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒரு புகைப்படத்தில் பார்ப்பது போல அழகாகச் சித்தரிப்பார்கள். அதன் நுணுக்கங்கள் அவர்களுக்கு அத்துப்படி. அவர்கள் ஒரு சூழலின் முக்கியமான ஒன்றை மையப்படுத்தி, பிறவற்றை சாட்சிகள் போல சுருக்கி, கற்பனையுடன் நம் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

வீணாக்கப்படும் உணவை ஏழைகளுக்கு அளிக்கும் கோயம்பத்தூரின் அமுதசுரபி


வீணாகும் உணவை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் மற்றும் யாருக்கும் எந்த விலையும் நிர்ணயிக்காமல் உணவளிக்கும் கோயம்பத்தூரின் அமுத சுரபி அமைப்பின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? பகுதி 7


(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? பகுதி 7 இன்று 50 வயது கடந்த எந்த ஒரு நபருக்கும் தனது பள்ளிக்கூட மற்றும் கல்லூரி ஆசிரியர்களில் குறைந்த பட்சம் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஒருவர் தனக்கும் தனது நண்பர்களுக்கும் தந்த வழிகாட்டுதல், கல்வியில் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு பற்றிய இனிய நினைவுகள் இருக்கும். இன்று … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா – பகுதி -6


(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா – பகுதி -6 மனமுதிர்ச்சி இல்லாத ஒருவர் தம் வயது அல்லது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்னும் உறவு முறையால் மட்டும் ஒரு குழந்தைக்கோ அல்லது குடும்பத் தலைவனுக்கோ எந்த வழிகாட்டுதல் அல்லது பரிந்துரை அல்லது அறிவுரை கூறவே முடியாது. எந்த ஒரு தனி நபருக்கும் தனது பிரச்சனை … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில்


எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில் bangalorereview  என்னும் இணைய இதழில் தோல் பை ‘ சிறுகதை வெளியாகி உள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தக் கதை இன்றும் நவீனத்தின் நுட்பத்துக்கு ஒரு உதாரணமான கதை. புதிதாய் எழுத வருவோருக்கு சாத்தியங்கள் பற்றிய ஒரு சாளரத்தைத் திறப்பது. முதன் முதலாய் இதை வெளியிட்ட … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment

M.G. Suresh (Author of சிலந்தி)


https://www.goodreads.com/author/show/2095835.M_G_Suresh

Posted in Uncategorized | Leave a comment