பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை
இன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல.
ஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் அதை எந்த ஊடகத்தில் வழி அது தவறாகச் சித்தரிக்கப்பட்டது என்று கருதுகிறாரோ அதே ஊடகம் வழியே தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். வன்முறை வாயிலாக அல்ல.
பத்மாவதியின் கதை மூன்று நூற்றாண்டுகள் பழமையானது மட்டுமல்ல, இப்போது உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்குவோர் சொல்வதே சரி என்பதற்கான எந்த சுவடியோ ஆதரமோ இல்லை. தமிழ் ஹிந்து கட்டுரையின் இந்தப் பகுதி மிக முக்கியமானது:
——————————————–
சித்தூர் கோட்டை முற்றுகையிடப்பட்டபோது பத்மாவதி அங்கே வாழ்ந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. பெண்ணாசை காரணமாகத்தான் சித்தூர் கோட்டையைக் கைப்பற்றச் சென்றார் கில்ஜி என்பதற்கும் ஆதாரம் இல்லை. பத்மாவதி என்பவர் தியாகத் திருவுருவாகவும் எழில் பொங்கும் பெண்ணாகவும் மக்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார். ஆனால் அப்படி ஒருவர் வாழ்ந்ததே இல்லை! அது ஒரு கவிஞனின் மனதில் எழுந்த கற்பனைக் கதாபாத்திரம். வெவ்வேறு கலைஞர்கள் வெவ்வேறு வடிவங்களில் அவளை உருவாக்கிக்கொள்ளலாம்.
———————————————
திவ்யா செரியனின் முழுக் கட்டுரைக்கான இணைப்பு————— இது.
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் மதவெறி இனவெறிக்கு எதிராக எல்லோரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டிய கால கட்டம் இது.
(image courtesy: tamil.thehindu.com)