பணியாளரின் ஆயுளைக் கேட்கும் பணிச்சுமை – தமிழ் ஹிந்து கட்டுரை
ஜப்பானில் 37 மணி நேரம் கூடத் தொடர்ந்து வேலை செய்யும் நிலையிலிருக்கும் ஊழியரின் உதாரணத்தைத் தமிழ் ஹிந்து கட்டுரையில் காண்கிறோம். கட்டுரைக்கான இணைப்பு ————————இது.
மோசமான மனிதவளக் கொள்கை மற்றும் அளவுக்கு அதிகமான பணிச்சுமை ஜப்பானுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் பொருந்தும். பணியாளர்களின் உட மன நலன்களைப் பேணும் பொறுப்பு நிறுவனங்களுக்கு உண்டு. மறுபக்கம் பணியாளரும் தமது வாழ்நாளையே கொடுத்து வருவாய் ஈட்டுவது குறித்து சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். குடும்பங்கள் எளிய வாழ்க்கை மற்றும் சுய தொழில் வருவாய் குறித்து யோசிக்க வேண்டும். அரசுகள் தொழிலாளி மீது அக்கறை அற்றவை. மக்கள் தாமே தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி .