லாரல் – ஹார்டியை முன் வைத்து ஜெயமோகனின் பதிவும் சூஃபியிசமும்
சூஃபியிசம் பற்றி வாசித்து வருகிறேன். இன்னும் நிறைய வாசிக்க இருக்கிறது. தற்செயலாக ஜெயமோகனின் இந்தப் பதிவு லாரல் ஹார்டி பற்றியது. அதன் இந்தப் பகுதி சூஃபியிசம் பற்றி நினைவு படுத்தியது. அது கீழே :
———————————————————-
தத்துவார்த்தமாகச் சொல்லப்போனால் நம்மைச்சூழ்ந்து பொருட்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு ஒரு காரியகாரண வலையை உருவாக்கியிருக்கின்றன. அதையே நாம் பொருள்வய உலகம் என்கிறோம். இந்தப்பொருள்வய உலகம் ஒட்டுமொத்தமாகவும் தனித்தனியாகவும் நம்முடன் தொடர்புகொண்டுள்ளது. நாம் என்ன நினைக்கிறோம் என்றால் அவற்றுக்கும் நமக்குமான உறவு நாம் எண்ணியபடி அமைந்துள்ளது என்று. அவற்றுக்கிடையே உள்ள உறவை நாம் முழுமையாக அறிவோம் என்று. அது பொய் என ஒருநாளில் பத்துதடவையாவது எனக்குத் தெரியவருகிறது.
———————————————————-
சூஃபியிசம் ஒரு இசை ஒழுங்கு பற்றிக் குறிப்பிடுகிறது. ‘ரிதம்’ என்று குறிப்பிடும் இது உயிருள்ள மற்றும் உயிரற்றவை இரண்டுக்குமான ஒரு ஒழுங்கு. மிகவும் சிக்கலான இது. ஜெயமோகனும் இதைக் கோடி காட்டி விட்டு
விட்டிருக்கிறார்.
ஒரு செயலை முடிக்கும் வரையான ஒரு ஒழுங்கை அதன் மீது நாம் கொண்டிருக்கும் குழப்பமில்லாத தீர்மானமே முடிவு செய்கிறது. மற்றும் பிறர் இடையூறில்லாத ஒரு தொடர் முயற்சியாய் நமது பணி இருப்பதை நம்மால் என்றுமே உறுதி செய்ய முடியாது.
உயிரில்லாத ஒரு பொருள் ஒரு ஒழுங்கிற்குள் அல்லது ஒரு அவசர சுருதிக்குள் மாட்டிக் கொள்கிறது. அதனால் அதற்கு நம் நடவடிக்கைகளில் தடை அல்லது ஆதரவு அல்லது குழப்பம் என ஏதாவது ஒன்றைச் செய்யும் திறன் வந்து விடுகிறது.
லாரல் அன்ட் ஹார்டி முன்வைக்கும் நகைச்சுவைக்குப் பின் இருக்கும் நுட்பமான ஒரு ஒழுங்கு பற்றி ஜெயமோகன் சிந்தைப் பொறி என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்கு நன்றி.
அவரது முழுப் பதிவுக்கான இணைப்பு இது.
(image courtesy:laurelhardy.org)