வாங்க வம்பளப்போம் – வண்டி எண் பலகை


Image result for number plates in tamil nadu with writings

வாங்க வம்பளப்போம் – வண்டி எண் பலகை

நேற்று ஒரு குழந்தை அதாவது சிறுவன் ஒரு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு என்னை முந்திப் போய்க் கொண்டிருந்தான். முதலில் சிறுவர்கள் வளரும் வயதில் கூட உடம்பை வளைக்காமல் இயந்திர வாகனத்தை ஓட்டுவது ஒரு பக்கம். மறு பக்கம் அந்த வண்டியின் எண் பலகையில் ‘போலீஸ்’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது நகை முரணாக இருந்தது.

தமிழ் நாட்டில் வழக்குரைஞர் , ஊடகம், அரசு, பத்திரிகை என வண்டி எண் பலகை மீது எழுதிக் கொள்வது சகஜம். சாதாரண மனிதன் என என்னைப் போன்றோர் எழுதிக் கொள்ளலாமா ? நான் பணியில் இருந்த போது இரவில் தனியாருக்கும் பகலில் என் நிறுவனத்துக்கும் ஓட்டும் ஓட்டுனர்கள் தவறாமல் அரசுப்பணிக்காக என என் நிறுவனத்தின் பெயரை எழுதி அதை முன் கண்ணாடியில் உட்பக்கமாக வைத்துக் கொள்வார்கள்.

இதன் உள் அர்த்தம் என்ன? சாலை விதிகள் ஒவ்வொரு சாராருக்கும் ஓவ்வொரு மாதிரியா? அல்லது காவல் துறையின் அணுகுமுறை வெவ்வேறு தொழில் புரிவோருக்கு வெவ்வேறு விதமாக இருக்கும் என நாம் எதிர் பார்க்கிறோமா ?

எந்த அரசு அலுவலகம் போகும் முன்பும் நண்பர்கள் ‘யாரையாவது தெரியுமா?’ என்று நம்மிடம் கேட்பது அடிக்கடி நாம் காண்பது. ஏன் நாம் இப்படி மக்கள் மீது மதிப்பில்லாத ஒரு அரசுப் பணி மனப்பாங்கை ஏற்கிறோம்? அரசு ஊழியர் மக்களின் சேவகர்கள் இல்லையா ?

அடுத்தது பணி சார்ந்த அந்தஸ்து. பணியில் சிறப்பாக சேவை புரிவதால் ஒரு முன் மாதிரி ஆகும் உயர்நிலை நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் இந்தப் பணி என் அந்தஸ்து என் உரிமை என்னும் மனப்பாங்கு எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது. அநேகமாக ஊழல் செய்து மாட்டிக் கொள்ளாத யாருமே நிரந்தரமாய் அரச பணியில் இருப்பது நடைமுறை.

மக்களுக்கு சேவை கிடைக்கிறதோ இல்லையோ வேலைக்குப் போய் ஏதாவது செய்து விட்டு வரும் அலட்சியமும் இது என் அந்தஸ்தாக்கும் எனும் தோரணையும் நாமே வளர்த்து விட்டது.

அரசுகள் மக்களுக்கு தரமான சேவை வழங்குவதை உறுதி செய்யும் கட்டுப்பாடோடு இருப்பதே இல்லை. அதுவே அந்தஸ்து மற்றும் வருவாய் இரண்டுக்குமான பணியாய் அரச பணியை ஆக்கி விட்டது. கரடியாய் அங்கே போய் கத்துவது அல்லது வாட்ஸ் அப் எடுத்து அனுப்புவது இவை மக்களில் சிலருக்கு அந்த நேரம் மனத்து இதமாய் இருக்கலாம்.

அரசியல்வாதிகள் ஊழலில்லாத தரமான சேவையை மக்களுக்கு வழங்குவதில் உறுதியாய் நிற்கும் வரை தீர்வு கிடையாது. அடுத்த வம்பில் மறுபடி பேசுவோம் .

(image courtesy:udaipurtimes.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s