குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை
மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலானது. இரண்டு மொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்களாலேயே அது சாத்தியம். ஆனால் இலக்கியம் ஒன்றில் மட்டுமே இந்த சிக்கல் உண்டு. இலக்கியத்துடன் ஆய்வுக் கட்டுரைகள் அல்லது அரசியல் கட்டுரைகளையும் சேர்க்கலாம். பல சொற்களுக்கு மாற்று மொழியில் மூன்று அல்லது நான்கு சொற்கள் மூல மொழியின் ஒற்றைச் சொல்லுக்குப் பதிலாகத் தேவைப்படும். கூகுள் உரையாடல் அல்லது பேச்சின் மொழிபெயர்ப்பை ஒரு செயலி மூலம் வழங்குகிறது என்று அதன் அரிய சாதனையைப் பாராட்டித் தினமணியில் கட்டுரை வந்துள்ளது. அதற்கான இணைப்பு ——————— இது.
மாணவர்கள், பயணிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இவர்கள் பல மொழி பேசுவோரை உலகம் முழுவதும் எதிர் கொள்கிறார்கள். கூகுளின் செயலியில் உருவாக்கி உள்ளோருக்கு உள்ள வசதி என்ன? எந்த மொழியிலும் உரையாடலில் அல்லது உரையில் நாம் 500 சொற்களுக்குள் மட்டுமே திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம். எழுதி வாசிக்கும் உரை இதற்கு விதி விலக்கு. ஒரு கட்டுரை போல அது பல கடினமான அல்லது நுட்பமான சொற்களை உள்ளடக்கி இருக்கும். கட்டுரையில் ம.ராசேந்திரன் குறிப்பிடும் பல நாட்டு எல்லைகளைக் கடந்து மனிதன் பயணிக்கும் கால கட்டம் இது என்பது உண்மை. வாசிப்பு மற்றும் எழுத்து இவைகளே இலக்கியத்தின் வாயிலாக சொற்களை அழியாமல் காக்கின்றன. மற்றும் புதிய சொற்கள் மற்றும் பதிவு முறையால் மொழிக்கு வளம் சேர்க்கின்றன.
கூகிளின் சாதனை பாராட்டுக்கு உரியது. தலையில் மாட்டும் ஒரு கருவி வழி இதை கூகுள் தருகிறார்கள். அது பற்றிய செய்திக்கான இணைப்பு————— இது.
(image courtesy:businessinsider.com)