அச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி
திரைப்படங்களில் நாம் சினிமாத்தனமான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கும் போது நிஜத்தில் யாரும் இல்லை என்றே நினைப்போம். இந்தக் காணொளியில் ”கடமையைச் செய்ய விடாமல் தடுக்கும் மேலதிகாரி அல்லது அரசியல்வாதி யாரைப் பார்த்தும் அஞ்சாதீர்கள். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் நமக்குக் காவலாய் விளங்குகிறது” என்னும் உரை வழியே இவர் காவல் துறை அதிகாரிகளுக்கு மட்டுமில்லாமல், மற்ற துறையில் வாயில்லாப் பூச்சிகளாய் வாழும் அதிகாரிகளுக்கும் நெஞ்சுரம் ஊட்டும், வழி காட்டுதல் தரும் அரிய உரையைச் செய்திருக்கிறார். தாம் இது வரை செய்துள்ள அச்சமில்லா, பாரபட்சமில்லாப் பணிகளையும் எடுத்துரைத்திருக்கிறார். இளைஞரான இவர் போல அடுத்த தலைமுறை அரசு ஊழியர்கள் மக்கள் பணியில் சமாதானமின்றிச் செயற் பட்டால் நம் நாடு தலை நிமிரும். மிகவும் பாராட்டுக்குரியவர் இந்த இளம் அதிகாரி.
பகிர்ந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.