வாங்க வம்பளப்போம் – திருமண வரவேற்பில் கால் கடுக்கும் வரிசைக் கலாச்சாரம்


வாங்க வம்பளப்போம் – திருமண வரவேற்பில் கால் கடுக்கும் வரிசைக் கலாச்சாரம்

திருமண வரவேற்பை மிகவும் பந்தாவாக, நிறைய கூட்டத்துடன், தன் பெருமை பேசப்படும் அளவு நடத்துவது சில நிறுவனங்கள் நிறைய பணம் ஈட்டிக் கொள்ள உதவுகிறது. அவ்வளவே. ஜாதி மத பேதமின்றி வரவேற்பில் மக்களை வரிசையில் கால் கடுக்க நிற்க வைப்பது ஒரு கலாச்சாரமாக நிறுவப்பட்டு விட்டது. சென்னையில் ஒரு இடத்துக்குப் போய் வருவது போக்குவரத்தில் மிகவும் சவாலானது. அதுவும் எந்த நிகழ்ச்சி என்றாலும் நிச்சயமாகத் தென்படுவது மூத்த குடிமக்களே.

இன்று தலைகீழாக நாம் ஒரு நவநாகரீகத்தை நிலை நாட்டி விட்டோம். ஒரு காலத்தில் வயதான எந்த ஆள் காலில் வேண்டுமானாலும் விழும் ஒரு மோசமான கலாச்சாரம் இருந்தது. அது ஒரு விபரீதம் என்றால் இன்று அதைத் தூக்கி அடிக்கும் அடுத்த விபரீதம் வந்து விட்டது. ஐந்து நிமிடம் கூட நிற்பது இயலாத வயோதிகர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நல் வாழ்த்துச் சொல்ல நிற்கிறார்கள். ஆசி இல்லை. கை கூப்பிக் கூட மண மக்கள் வணங்குவதில்லை. வணங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எல்லோரையும் இருக்கைகளில் அமர்த்தி முப்பது வயது கூட நிறையாத இளம் தம்பதி எல்லோரையும் சென்று ஒவ்வொருவராக விசாரித்து விட்டு வரலாமே. அந்த இளம் தம்பதிக்கும் நின்று கொண்டே இருப்பதை விட நடப்பது எளியதாக, வலி குறைவானதாக, இனிமையானதாக இருக்கும்.

பெரிதும் நான் திருமண வரவேற்புக்குப் போவதைத் தவிர்த்து விடுவேன். வருடத்துக்கு ஒன்று என்பதே என்னளவில் பெரிய சாதனை. வரும் அழைப்பிதழ் எல்லாவற்றுக்கும் மரியாதையாகப் போய் நிற்கும் அப்பாவிகளை நினைத்து மிகவும் அனுதாபப் படுகிறேன்.

 

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in காணொளி and tagged , , . Bookmark the permalink.

One Response to வாங்க வம்பளப்போம் – திருமண வரவேற்பில் கால் கடுக்கும் வரிசைக் கலாச்சாரம்

  1. வேகநரி says:

    முற்றிலும் உண்மை.முற்றிலும் உண்மை.தங்கள் ஆடம்பரத்தை எல்லோரும் பெருமை பேச வேண்டும் என்பதிற்காகவே நடத்தபடுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s