கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ
நேற்று நடைப் பயிற்சிக்கு மகளும் என்னுடன் வந்திருந்தார். அப்போது இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலை என மர்ஃபி அவென்யூவைக் காட்டினார். 1842ல் Martin Murphy Jr. என்பவர் 23 சதுர மைல் உள்ள இந்த இடத்தை வாங்கி, கோதுமை வயல், பழத் தோட்டங்கள் எனப் பலவற்றையும் உருவாக்கினார். கலிபோர்னியாவின் முதல் பழத் தோட்டத்தை அவர் உருவாக்கினார் என்பதற்காக அவர் பெயர் இந்த சாலைக்கு சூட்டப் பட்டுள்ளது. பழமையான ஒரு தெரு என்றாலும் அதன் அழகு கெடாமல் பல உணவங்களும் அலுவலகங்களும் இங்கே வந்துள்ளன.
மர்ஃபி அவென்யூ பற்றிய முழு விவரத்துக்கான இணைப்பு —————— இது.
அதன் விரிவான புகைப்படங்களுக்கான இணைப்பு ——————— இது.
அந்த தெரு முனையில் இருக்கும் பூங்காவிற்குப் போனீர்களா? அதில் உள்ள கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் (பகலில் மட்டும்) இனிய இசையை இசைக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும்! இது rolling ball structure என்ற கருவி . புவி ஈர்ப்பு விசையை வைத்து பந்துகளை உருட்டும்!