கலிபோர்னியா – சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனி இடம் சாலைகளில்
கலிபோர்னியாவின் சன்னிவேலின் பெரும்பாலான சாலைகள் நம் சென்னையின் சாலைகளைப் போலக் குறுகலானவையே. ‘ப்ரீ வே’ என்னும் வெளிச் சுற்று சாலைகள் விரிந்தவை. நம் ஊரிலும் அதைப் போன்ற சாலைகள் வந்து விட்டன. ஆனால் நாம் சைக்கிள் ஓட்டுபவரை மிரட்டும் போக்குவரத்து முறையைத் தான் தற்போது கை வசம் வைத்திருக்கிறோம். அடையார் வரை தான் நான் சைக்கிள் ஓட்டுகிறேன். நான் எதிர்கொள்ளும் சவால்கள் மிக அதிகம். நாம் ஒரே நாளில் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக ஆக வேண்டியதில்லை. ஆனால் சைக்கிள் ஓட்டுபவருக்கு வழி விடுங்கள் என்றாவது ஒரு துவக்கத்தை செய்தே ஆக வேண்டும்.
சைக்கிள் ஓட்டிக்கு ஒவ்வொரு சாலைகளின் சந்திப்பிலும் அவர்களது பாதை – அதாவது சாலையின் எந்த ஓரம் அவர்களுடையது என்பது , தெளிவாகக் குறிக்கப் பட்டு விடுகிறது.
அவர்களுக்கு நுழைய அனுமதி இல்லை என்றால் அதுவும் தான்.
image 1 courtesy:streetblog.org