கலிபோர்னியா – மர்ஃபியின் வீடு இருந்த இடம் இப்போது பெரிய பூங்கா
முந்தைய பதிவில் மர்ஃபி முதன் முதலில் பண்ணை மற்றும் பழத் தோட்டங்களை சன்னிவேலில் நிறுவினார் என்பதால் அவர் நினைவாக ஒரு சாலைக்கு மர்ஃபி அவென்யூ எனப் பெயர் வைக்கப் பட்டிருக்கிறது என்பவற்றைப் பார்த்தோம். மர்ஃபி இருந்த வீடு ‘கால் ட்ரெயின்’ என அழைக்கப்படும் சேவையில் சன்னிவேல் ரயில் நிலையம் உள்ள இடத்துக்குப் பின்பக்கமாக இருக்கிறது. அதன் புகைப் படங்களைப் பகிர்கிறேன். மர்ஃபி நினைவாகக் கல்வெட்டு ஒன்று வைக்கப் பட்டுள்ளது.
மர்ஃபியுடன் சம்பந்தப் படாத ஆனால் சன்னிவேல் நகருடன் சம்பந்தப் பட்ட ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இயந்திரம் இங்கே வைக்கப் பட்டுள்ளது. அதன் புகைப் படம் கீழே. Hendy Stamp Mill எனப்படும் அது தாதுக்கள் மண் கட்டிகளிக்குள் இருக்கும் போது, அவற்றை உடைத்துத் தாதுவைப் பிரித்தெடுக்கும் இயந்திரமாகும். சான் பிரான்ஸிஸ்கோவில் தான் அதன் தொழிற்சாலை இருந்தது. அங்கே 1900களில் பூகம்பம் வந்ததால் சன்னிவேலுக்கு அந்த இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை மாற்றப் பட்டது. இந்த இயந்திரம் பற்றிய விரிவான பதிவுக்கான இணைப்பு—————————— இது.
குழந்தைகள் விளையாடும் இடம், அனுமதி பெற்றுப் பட்டாசுகள் வெடிக்கும் இடம், பெரிய பெரிய மரங்கள் நிறைந்திருக்கும் ரம்மியமான பூங்கா இது. அது பற்றிய புகைப்படங்கள் கீழே.