ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா
சத்கம் என்றால் ஆறு என ‘சிதானந்த ரூபாய சிவோகம் சிவோகம் ‘ என முடியும் ஆறு ஆதி சங்கரரின் பாடல்களைத் தமிழில் தந்திருக்கிறார் சாரு. அது அவரது பழுப்பு நிறப் பக்கங்கள் (தினமணியில் பத்தியாக வந்தது) நூலின் அடுத்த பகுதியில் தி.ஜானகிராமன் பற்றிய பதிவில் வரக் கூடியது.
சாருவின் முழுப் பதிவுக்கான இணைப்பு ——————— இது.
இதைப் பகிர்ந்ததற்காக சாருவுக்கு நன்றி. ஆறு பாடல்களில் இந்தப் பாடல் என்னை திடுக்கிட வைத்தது என்றே கூறலாம்:
——————————————————————————————————————
ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா
ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை
சாதியில்லை பேதமில்லை பிதா இல்லை மாதா இல்லை ஜன்மமும் இல்லை
உற்றம் சுற்றம் குரு சிஷ்யன் யாரும் இல்லை
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
————————————————————————————————
இத்தனை நாட்களாக நான் ஆதி சங்கரர் முதற் கொண்டு சைவ மரபில் அனைவரும் வருணாசிரம முறை மற்றும் ஜாதி பேதத்தை ஏற்போர் என்றே கருத்திற் கொண்டிருந்தேன். ஆதி சங்கரர் இவ்வளவு தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டுப் போயிருக்கிறார் என்றால் ஏன் அது இந்தியாவின் பெருவாரியான மக்களின் மரபான சைவ மரபில் முக்கியத்துவம் பெறவில்லை ? மிகவும் வியப்பளிப்பது.
உண்மையில் தத்துவம் அல்லது ஆன்மிகம் என்பவற்றின் சாரத்தை ஒருவர் தேடிப் போனால் அது ‘பேதங்கள் மாயை. எல்லா உயிரினமும் ஒன்றே’ என்னும் இறுதி உண்மையைக் கூறும். நாம் கொண்டாடும் தத்துவங்கள் மற்றும் குருமார்கள் போதித்தவற்றுக்கும் நாம் செல்லும் பாதைக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது! கசப்பான உண்மை.