கலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள்
தெருவின் ஓரத்தில், ஆனால் முறையான வாகன நிறுத்துமிடத்தில், வெளியே நாற்காலிகள் போட்டு அல்லது கையேந்தி பவன் போல சாப்பிடக் கூடிய இரண்டு உணவகங்களை நான் ஒரே நாளில் பார்த்தேன். முதல் புகைப் படத்தில் இருப்பது இந்திய ‘சாட் உணவு’ வண்டி. இரண்டாவது மெக்சிகோ வகை உணவு வண்டி. மூன்றாவதாக உள்ள புகைப்படத்தில் உள்ளதே அதிக பட்சம் நாம் அமெரிக்காவில் காண்பது. வெய்யிலுக்காக ‘ஸ்டார் பக்ஸ் ‘ போன்ற காபி விற்கும் கடைகளின் வெளியே நாம் நாற்காலிகளைக் காணலாம். அமெரிக்காவில் தெருவோர உணவுக் கடைகளுக்கு அனுமதி உண்டு என்பது எனக்கு இன்னும் வியப்பானதே.