அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள்
புல் வெட்டும் ஒரு தொழிலாளி கையில் இருக்கும் இயந்திரம் மிகுந்த ஒலி செய்யக் கூடியது. அது வெட்டும் புற்களின் துகள்கள் அவரது மூச்சின் வழி உள்ளே சென்று அவரை பாதிக்கும் சாத்தியங்கள் உண்டு. எனவே அவரது காது மற்றும் மூக்கு இரண்டையுமே அவர் பாதுகாத்துக் கொள்ளும் கவசம் அவருக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
அமெரிக்கா முதலாளித்துவ நாடு தான். தொழிலாளிகளின் மீது பரிவான அணுகு முறை அவர்களிடம் கிடையவே கிடையாது. ஆனால் நாமெல்லாம் தொழிலாளர்கள் பற்றிப் பேசாத நாளே கிடையாது. அவர்களுக்காகப் போராடத்தான் மொத்த அரசியல் கட்சிகளின் எல்லாத் தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாம் அவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து யோசித்து இருப்போமா? எளிய சில பாதுகாப்புகளை நம்மால் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு நிகராகச் செய்து, நம் துப்புரவுத் தொழிலாளிகளும் பாதுகாப்பாக இருக்க ஆவன செய்ய இயலும்.