காஃப்காவின் படைப்புலகம் -6 -Wedding preparations in the country
தலைப்பை வைத்து நாம் திருமணத்துக்கு நடக்கும் சாதாரணமான அல்லது சம்பிரதாயமான ஏற்பாடுகள் பற்றிய நாவல் என்றே முடிவு செய்வோம். பல பக்கங்கள் காணாமற் போன கதை இது. ஆனாலும் காஃப்கா அந்த ஒன்றை நோக்கி நகரவே இல்லை.
அப்படி என்றால் என்ன தயார் ஆவது அது? வேலைச் சுமைகளும், நகரத்தின் தனிமையும் முடக்கிப் போட்ட ஒருவன் , விடுமுறையை எப்படியும் கொண்டாட வேண்டும் என்று கிராமத்திற்கு வருகிறான். ஏனெனில் செலவு குறைவு. பலரையும் பார்த்து அவன் தன் மனதுள் பலவிதமான யூகங்களைச் செய்கிறான். சம வயதினனான ஒரு இளைஞனிடம் மட்டும் பேசுகிறான். மாய யதார்த்தம் எதுவும் இல்லை இந்தக் குறு நாவலில்.
பெரிதும் குடும்ப வாழ்க்கையை அவர் எதிர் மறையாகவே அணுகினார் என நாம் முடிவு செய்திருந்தால் , அவர் நடு நிலையான, மற்றும் தெளிவான அணுகு முறையை வைத்திருந்தார் என்பது இந்த நாவல் மூலம் நமக்குத் தெளிவாகும். குடும்பம் என்பது ஒரு அடைப்பே. அனேகமாகக் குரூரமும் கலந்ததே. தன்னலமும் அரசியல் நடவடிக்கைகளும் அதனுள் இருக்கவே செய்கின்றன. மறுபக்கம் என்றும் தனிமை வாட்டும் ஒரு மனிதனுக்கு குடும்ப வாழ்க்கைக்கு நிகரான அல்லது மாற்றான ஒரு தீர்வு உண்டா? இந்தக் கேள்வியை அவர் இந்த நாவலில் நன்றாகவே அலசி இருக்கிறார்.
(image courtesy:quotefancy.com)