காஃப்காவின் படைப்புலகம் -8- The village school master
காஃப்காவின் படைப்புக்களுள் உள்ளார்ந்த ஒரு தொடர் சரடு என ஒன்றை நாம் காண முயன்றால் அது கேள்வி கேட்பதும், நம் வாழ்க்கையில் கேள்விகள் மறுக்கப்பட்ட இடங்களைக் கண்டு வியப்பதும் தாம். ஒரு விதத்தில் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமும் அதுவே. The village school master என்னும் கதை நமது மூட நம்பிக்கைகள் ஏன் நிரந்தரமாய் இருக்கின்றன என்ற கேள்வியை அலசுகிறார். நாம் ஒரு விமர்சனம் இல்லாத விழிப்பான பார்வையை வைக்கிறோம்.
The village school master கதையில் ஒரு கிராமத்தின் அருகே நிலத்தில் ஒரு பெரிய மரு போன்ற கரியத் திட்டு ஒன்று திடீரென முளைக்கிறது. அந்த கிராமத்தின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் இது கெட்ட சகுனம் என்றும், இதன் பின் வரும் கெட்டதற்கெல்லாம் மக்கள் தயாராக வேண்டும் என்றும் எச்சரித்து ஒரு சுற்றரிக்கை போல அச்சடித்து வினியோகிக்கிறார். பின்னர் அரசாங்கம் நியமிக்கும் விவசாயப் பட்டதாரிகள் இது இயல்பாக நிலத்தில் நிகழும் ஒன்றே என விளக்குகிறார்கள். இந்த நிலையில் அரசு தரப்பில் உள்ள ஒரு அதிகாரி, அந்த இடத்தில் வந்த் மரு போன்ற ஒன்று முதன் முதலாக அந்த கிராமத்தில் வருவது அதிசயமானது என்பதால் அதை ஒரு அருங்காட்சியகம் போல எல்லை அமைத்து அவரை அதற்குப் பாதுகாப்பாகப் போட முடிவு செய்கிறார். மரியாதையாக அந்த ஆசிரியரை அழைத்து அதை விளக்குகிறார். அந்த இடத்தில் கதை முடிந்து விடுகிறது.
கருப்பு நிற மரு என்பது இங்கே ஒரு படிமமாக இங்கே நமக்கு நமது மூட நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது. நாம் மூட நம்பிக்கைகளை முன் கூட்டியே திட்டமிட்டு அல்லது வலியுறுத்தித் தவிர்ப்பது என எதுவும் கிடையாது. அது நம் வாழ்க்கையின், பண்பாட்டின் வரலாற்றின் அங்கமாகவே என்றும் நிற்கிறது.
காஃப்கா எழுதிக் கொண்டிருந்த காலம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.நூற்றாண்டு கடந்தும் மூட நம்பிக்கைகள் மீதான நமது பிடிமானம் அசைந்து கொடுத்த பாடில்லை. காஃப்காவின் படைப்புலகம் வாழ்க்கையை நிராகரிப்பதில்லை. மூர்க்கத்தனமாக விமர்சித்துத் தன்னை அதனின்றும் தனித்துக் கொள்வதுமில்லை. அது நம் கண்ணோட்டத்தை நமக்கே ஒரு கண்ணாடியாகக் காட்டும் படைப்புலமாகும்.
மேலும் வாசிப்போம்.