காஃப்காவின் படைப்புலகம்- 11- The hunter Gracchus A fragment
காஃப்காவின் படைப்புகளில் இது சற்றே எளிமையான ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஆவியாக உலவி வரும் ஒரு வேட்டைக்காரர் ஒரு மாலுமியுடன் உரையாடுவதே கதை. இதில் காஃப்கா நுட்பமாக முன் வைப்பது கடலுக்கு என ஒரு தனி தூர அலகு மற்றும் கடலுக்குள் எல்லைகளை வகுத்தது இயற்கையின் மீது நாம் வைத்திருக்கும் ஆதிக்கத்தின் நிதர்சனமான சான்று என்பதே. ஆதிகாலத்தில் மனிதனிடம் வேட்டையாடும் குணமும், தனது – தனது சமூகத்துக்கான நில எல்லைகளை வகுக்கும் ஆதிக்க மனப்பான்மையும் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவை இயற்கையை ஒட்டியவை. தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் இவை மனிதனின் ஆதிக்க வெறிக்குப் புதிய விதிகளையும் அலகுகளையும் வகுத்தும் கொடுத்தன.
இதன் இயல்பான அடுத்த கட்டம் என்பது போரே. போரும் ஆதிகாலத்தில் தற்காப்புக்கு மட்டுமே இருந்தது. பின்னர் அது நிலத்தை, பெண்ணை, பொருளை, அதிகாரத்தை எட்டும் காரணங்களுக்காக நிகழ்த்தப் பட்டது. போர்கள் மனித இனத்தின் பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை வெகுவாக சிதைத்தது. மதங்கள் அதிகாரம் மற்றும் போர்கள் இவற்றுக்கு அப்பாற்பட்டு எப்போதுமே நிற்கவில்லை.
நாம் சர்வ சாதாரணமாகக் கட்டமைத்த அதிகார சூத்திரங்களை காஃப்கா கண்டிப்பாகக் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
மேலும் வாசிப்போம்.
(image courtesy:quotefancy.com)