கலிபோர்னியா – மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்
நாம் புகைப் படத்தில் சிவப்பு நிறத்தில் காண்பது மாற்றுத் திறனாளியான நடக்க முடியாத ஒருவர் அல்லது வயதான ஒருவர் பெரிய பல் பொருள் அங்காடியில் தமது பொருட்களைத் தாமே எடுத்துக் கொள்ள உதவும் ‘பேட்டரி’யில் இயங்கும் வண்டியாகும். பேருந்துகள், ரயில் மற்றும் டிராம் எதிலும் மாற்றுத் திறனாளிகள் ஏறி இறங்க வசதி உண்டு. கழிப்பறைகள் அவர்களுக்கு ஏற்றாவாரு எல்லா வணிக வளாகங்களிலும் அமைக்கப் பட்டிருக்கும். நாம் இந்தியாவில் உள்ள வாகன நெருக்கடி மற்றும் ஜனத்தொகை இவற்றை வைத்துப் பார்க்கும் போது தனியாக மாற்றுத் திறனாளிகளுக்கு என குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளை இயக்கலாம். தனியார் மற்றும் அரசு வளாகங்களில் அவர்களுக்கான ஏற்பாடுகள் கட்டாயமாக்கப் பட வேண்டும்.