காஃப்காவின் படைப்புலகம் -12-A report to an academy
காஃப்கா ஒரு நூற்றாண்டுக்கு முன்பே உருவாக்கிய படைப்புகளில் ஊற்றெடுக்கும் கற்பனையின் வீச்சு சமகால எழுத்தில் அரிதாகவே காணக் கிடைப்பது. ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக் களனையும் அரிய கற்பனை மிகுந்த சூழலையும் கொண்டது.
A report to an academy என்னும் கதையில் ஐந்து வருடம் முன் வரை மனிதக் குரங்காய் இருந்தவர் இப்போது ஒரு கல்வியாளர் மாநாட்டில் உரையாற்றுகிறார். ஒரு தீவில் மனிதக் குரங்காக அலைந்து கொண்டிருந்த அவரை ஒரு கப்பலில் சென்ற சிலர், துப்பாக்கி குண்டுகளால் காயப் படுத்தி, பின்னர் சிறைப் பிடித்து விடுகின்றனர். பலவற்றை மனிதர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்ட அவர், சில மனிதர்கள் ஆர்வத்துடன் கற்பித்தவற்றால் வெகு விரைவாகவே ஒரு கற்றறிந்த ஆளுக்கு இணையான ஒருவராகப் பரிணமிக்கிறார்.
தெள்ளத் தெளிவாக இந்தக் கதை அசலான, கற்பனை மிகுந்த சிந்தனை செய்வதே நமக்குப் பழக்கமில்லை என்பதை நுட்பமாக முன் வைக்கும் கதை. கதையே நீண்ட ஒரு உரைதான். அந்த உரையில் ஒரு இடத்தில் சுதந்திரம் என்பதை, சர்க்கஸில் அந்தரத்தில் தாவித் தாவி சாகசம் செய்யும் ஒரு ஆளின் நிலையோடு ஒப்பிடுகிறார். அதாவது சுதந்திரம் என்பதே மிகவும் பழக்கமான, பாதுகாப்பான, அங்கீரிக்கப்பட்ட ஒரு தடத்துக்குள் வலம் வருவதைத் தாண்டி எதுவுமில்லை என்னும் நம் மனப்பாங்கை அவர் எள்ளுகிறார். ஜ
காஃப்காவின் படைப்புலகம் நம் உலகின் விளிம்புகளை நமக்கே எடுத்துக் காட்டுவது. மனிதனின் குறுகிய கண்ணோட்டத்தை முற்றிலுமாகவே நிராகரிப்பது. மனிதனின் பரிணாம வளர்ச்சி பல ஆயிர்ம் ஆண்டுகளுக்கு முன்பே , டார்வின் கோட்பாட்டில் குறிப்பிட்ட ஒற்றைப் பரிணாம வளர்ச்சிக்குப் பின் நின்று விட்டதோ என்னும் கேள்வியை அவர் எழுப்புகிறார்.
மேலும் வாசிப்போம்.