காஃப்காவின் படைப்புலகம் -The great wall of China & The News of the building of the wall
The great wall of China மற்றும் The News of the building of the wall இரண்டிலுமே காஃப்கா முதலில் நாம் பார்த்த The hunter Gracchus என்னும் கதையில் நாடுகளின் எல்லைகள் மற்றும் அவை கடல் அல்லது மலை அல்லது காடு என்னும் இயற்கையின் பொக்கிஷங்களுக்குள் எல்லாம் ஊடுருவி, அங்கு வாழும் பழங்குடியினர் அல்லது மீனவர் போன்றவர்களையும் கட்டுப் படுத்த முடியுமா? என்னும் கேள்வியையே அவர் சீனப் பெருஞ்சுவர் பற்றி எழுப்புகிறார். நாம் காணும் இந்த இரண்டு படைப்புகளுமே கிட்டத்தட்ட கட்டுரை வடிவில் ஆனவையே. பெருஞ்சுவர் ஒவ்வொரு நிலப் பகுதியிலும் துண்டுகளாகக் கட்டப்பட்டு இணைக்கப் படுகிறது. அந்த அந்தப் பகுதி மக்கள் பெருமைப் படுகிறார்கள். வட சீனப் பகுதியில் வரும் சீனப் பெருஞ்சுவர் திபெத் அருகே தென் சீனப் பகுதியில் உள்ள ஒரு குடிமகனுக்கு எந்த ஒரு உவப்பையும் தரவில்லை. மன்னரின் பரம்பரை மற்றும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இன்று மன்னராய் இருப்பவரைக் கொன்று அவர்களில் ஒருவர் மன்னராகலாம். ஆனால் மன்னன் இப்படிப் பட்ட பேராபத்தில் இருந்தாலும் மக்களுக்குத் தலைவனாகத் தேவைப் படுகிறான். பெருஞ்சுவர் மன்னரையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்ற எழுப்பப் பட்டதா? அல்லது மக்களுக்காகவா? எந்த எதிரியிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சுவர் எழுப்பப் பட்டதோ அந்த எதிரி பழங்குடியினரா? எனப் பல கேள்விகள் இந்தப் பதிவுகளில் காஃப்காவால் எழுப்பப் படுகின்றன. ஜெர்மானியரான அவர் சீனப் பெருஞ்சுவர் பற்றி இத்தனை வித்தியாசமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார். அவரது கண்ணோட்டம் சுதந்திர சிந்தனையை நோக்கியே இருந்தது.
மேலும் வாசிப்போம்.