காஃப்காவின் படைப்புலகம் -15 – A hunger artist


Image result for kafka quotes

காஃப்காவின் படைப்புலகம் -15 – A hunger artist

மாய யதார்த்தம் என்பது தேவைப் படும் கதைகளில் மட்டுமே காஃப்காவால் பயன்படுத்தப் படுகிறது. A hunger artist என்னும் சிறுகதை மிகவும் வித்தியாசமான களன் மற்றும் கதாபாத்திரத்தைக் கொண்டது. இப்படி ஒரு கற்பனை ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமாக ஊற்றெடுக்கும் படைப்பாளிகள் எந்த மொழியிலும் மிகவும் அரிதானவர்களே.

A hunger artist என்னும் தலைப்பு தான் கதையே. தனது தொழிலையே பட்டினி கிடந்து வேடிக்கை காட்டுவதாக வைத்திருக்கும் ஒரு ஆள் பற்றியது. அவரை வைத்துப் பிழைக்கும் ஒரு முதலீட்டாளர் அவருக்கு உண்டு. அவருடைய ஆதிக்கத்தினால் எப்போதும் 40 நாட்களுக்கு மேல் பட்டினிக் கலைஞன் பட்டியினியாய் இருப்பது கிடையாது. அவனுக்கோ நீண்ட நாட்கள் பட்டினி கிடக்க விருப்பம். மாமிசம் வெட்டுகிறவர்கள் அவ்வப்போது அந்தக் கலைஞன் சாப்பிடவில்லை என்பதை உறுதி செய்து கொள்வார்கள். இரவிலும் கூடப் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. காலையில் அவர்களுக்கு அங்கேயே உணவு உண்டு. ஒரு பெரிய மண்டபம் போன்ற இடத்தில் அவர்கள் அந்தக் கலைஞனைக் கூண்டில் பார்த்து விட்டுச் செல்வார்கள். காலையில் அவர்களுக்கு உணவும் அங்கேயே கிடைக்கும்.

ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் அவனை அழைத்துச் செல்கிறார் அந்த முதலீட்டாளர். மக்களுக்குப் பட்டினி கிடப்பவனை வேடிக்கை பார்ப்பதில் உள்ள ஈர்ப்புக் குறைந்து விடுகிறது. அந்த முதலீட்டாளர் அவனை ஒரு சர்க்கஸ் கம்பெனியிடம் கொடுத்து விடுகிறார். அவர்கள் அவனை விலங்குகள் வரிசையில் ஒரு கூண்டுக்குள் அகைக்கிறார்கள். மக்கள் ஆரம்பத்தில் பார்த்தாலும் காலப் போக்கில் அவன் பற்றிய ஆர்வம் குறைந்து விடுகிறது. அவன் கூண்டுக்கு வெளியே இன்று இத்தனையாவது நாள் என எழுதி வைத்து வருவதும் நின்று போகிறது. அவன் இருக்கும் கூண்டில் அவனைச் சுற்றி இருந்த புற்கள் வைக்கோல் இவையே தென்படுகின்றன. அவன் மிகவும் மெலிந்து போயிருக்கிறான் ஒரு சிறுத்தைக்குக் கூண்டு வேண்டும் எனத் தேடும் போது தான் அவன் இருப்பதே நினைவுக்கு வருகிறது. கூண்டுக்கு அருகே சென்று அவன் எவ்வாறு இருக்கிறான் என விசாரிக்கிறார். அவன் தான் பட்டினியைத் தொடர விரும்புவதாகவே கூறுகிறான். அவர் இப்போது யாரும் ஆர்வம் காட்டவில்லையே என்கிறார். பட்டினிக் கலைஞன் தான் விரும்பும் உணவு எங்கும் கிடைக்கவில்லை. அதனால் தான் பட்டினியாகவே இருந்தேன் என்கிறான். ஓரிரு நாட்களில் அவன் உயிர் நீத்து விடுகிறான். அந்தக் கூண்டில் ஒரு சிறுத்தைக் குட்டி அடைக்கப் படுகிறது. அந்த சிறுத்தைக் குட்டிக்கோ அதற்கு விருப்பமான உணவுகள் வழங்கப் படுகின்றன.

கலை மற்றும் கலைஞர்கள் பற்றிய மலினமான அணுகு முறையே வெகுஜன வெளியில் இருக்கிறது என்பதை இந்தக் கதை நுட்பமாக நமக்குக் காட்டுகிறது. இதை ஒரு கலையாகக் காட்டும் முதலீட்டாளரையும், அவன் விரும்பும் உணவு கூட அவனுக்கு மறுக்கப்பட்டது என்னும் உண்மையும் இந்தக் கதையில் மானுடத்தின் குரூரத்தை நுட்பமாகச் சுட்டுபவை. கலை மற்றும் நல்ல கலை இவை பற்றிய மென் உணர்வும் ஆர்வமும் அற்ற வெகு ஜனத்தால் ஒரு நல்ல கலைஞன் அல்லது எழுத்தாளன் வாழ் நாள் முழுவதும் வருத்தத்தையே அனுபவிக்க நேரிடுகிறது. காஃப்காவின் வாழ்க்கையே இதற்கு ஒரு உதாரணம்.

(image courtesy: pinterest.com)

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை, விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s