கலிபோர்னியா – சாலைப் பராமரிப்பு
வாழ்க்கைத் தரம் என்றால் நமக்கு பொருள் வாங்கப் பணம், வீடு, வாகனம், உடைகள் இப்படித் தானே தோன்றுகின்றன? நல்ல சாலைகளை நாம் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே பார்க்கிறோம். இல்லையா? நல்ல சாலைகளுக்கும் நமக்கும் தலைமுறைமுறையாய்த் தொடர்பின்றிப் போய் விட்டது.
பெட்ரோல் (காசொலின்) நிரப்பியதும், என் மகளிடம் ” நீ ஏன் டயருக்குக் காற்றே அடிக்கவில்லை?” என்றேன். என் மகள் “இங்கே சாலைகள் மிகவும் நன்றாயிருக்கின்றன. வண்டியை ‘சர்வீசு’க்கும் விடும் போது காற்று சரி பார்ப்பார்கள் அது போதும்” என்றார்.
இங்கேயும் சாலையின் ஒரு சிறு பகுதியை மட்டும் செப்பனிடும் வேலை நடக்கிறது. ஆனால் அந்த சாலையின் தரமும், வேலை முடிந்த பின் அந்தப் பகுதியின் உறுதியும் மிக அருமையானவை. அதை செய்யும் போது, போக்குவரத்து ஒழுங்கு முறையாகச் செய்யவும் படுகிறது. பெரிய ஊழல்கள் அன்றாட வருவாய்க்கு வழியாக சாலைப் பராமரிப்பில் நடப்பதை நாம் பார்த்துப் பழகிக் கொண்டும் விட்டோம்.
நாம் கட்டும் வரிக்கு ஒரு நல்ல சாலை கூடத் தர முடியாத அளவு இந்தியா ஒன்றும் மோசமாயில்லை. நாம் ஊழலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை.