ஆறு பேரின் உயிரிழப்பு- அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாண பாலம் உடைந்த விபத்து
ஆயத்தமாக உள்ள கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதிலும் மற்றும் தொங்கு பாலமாக அமைப்பதில் உள்ள தொழில் நுட்பத்தில் இருந்த சிக்கல்களை முன் யோசனை செய்யாததாலும், அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாணத்தில் ஒரு நடை மேம்பாலம், கட்டுமானப் பணி பாதி முடிந்த நிலையில் உடைந்து விபத்தாகி ஆறு பேரின் உயிரைப் பலி கொண்டது. தொழில் நுட்பம் மற்றும் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சியில் உலகை பிரமிக்க வைக்கும் அமெரிக்காவுக்கு இது ஏற்படுத்தி இருக்கும் அதிர்ச்சி, எல்லா நாடுகளுக்குமே ஒரு பாடமாக அமையக் கூடியது. அமெரிக்கா என்றாலே அதிசயத்து நாம் வாய் பிளக்கத் தேவையில்லை என்பதை நமக்கு உணர்த்துவது. முதலில் கோபுரங்களை அமைத்த பின்பே அவற்றின் இடைப்பட்ட பாலம் அமைக்கப் படுவது வழக்கம் என்றும், இந்தக் கட்டுமானத்தில் அது பின்பற்றப் படவில்லை என்னும் செய்தி கூறுகிறது.
விரிவான செய்திக்கான இணைப்பு ———————- இது.
இந்தியாவின் கட்டுமானத்தில் இது போன்ற விபத்துகள் குறைவே. குறிப்பாக அரசு மேலெடுத்த கட்டுமானங்களில். தொழில் நுட்பம் மற்றும் திட்டமிடுதலில் நாம் சளைத்தவர்களே அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது.
(image courtesy: Daily Express.com)