கலிபோர்னியா- Caltrain
Caltrain என்பது கலிபோர்னியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனம். Car Poool என்னும் முறையில் ஒருவர் தனியாகக் காரில் போவது என்னும் முறையில் காலை 5-9 மணி மற்றும் மாலை 3-7 மணி இந்த நேரங்களில் தடை செய்யப் பட்டது. எனவே Caltrain அல்லது BART (Bay Area Rapid Transit) இவற்றையே அலுவலகம் செல்வோர் பயன்படுத்த வேண்டும். அலுவலக நேரத்துக்குப் போய்ச் சேரவும் திரும்பி வரவும் இந்த நேரங்கள் முக்கியமானவை இல்லையா? எனவே கலிபோர்னியாவின் சான் பிரான்ஸிஸ்கோ என்னும் வணிக நகரத்துக்கு வேலைக்குப் போய் வருவோருக்கு எந்த அளவு இந்த இரண்டும் முக்கியமானவை என்பதை நான் கூறத் தேவையில்லை.
சைக்கிளை ரயிலுக்கு உள்ளே கொண்டு செல்லலாம் அல்லது ரயில் நிலையத்தில் நிறுத்திக் கொள்ளலாம். இன்று காலை எனக்கு முன்னே ஒரு இளம் பெண் நகரும் படிக்கட்டில் தனது சைக்கிளுடன் சென்றார். அவர் ஒரு கணம் பிசகினாலும் எனக்கு என்ன ஆகும் என பயந்த படியே நான் பின்னால் சென்றேன். Caltrain ஐப் பொருத்த வரை நாம் ரயில் நிலையத்தில் உள்ளத் தானியங்கி இயந்திரத்தில் பயணச் சீட்டு வாங்கலாம். நேரம் பிடிக்கும். ஆனால் Clipper Card இருந்தால் அதில் உள்ள Prepaid தொகையைப் பயன்படுத்தி எளிதாகப் பயணிக்கலாம். நடை மேடைகளில் உள்ள அதற்கான கருவி முன்பு நமது அட்டையை நாம் காட்டி உள்ளே ஏற வேண்டும். இறங்கும் போதோ மறக்காமல் அதைப் பயன்படுத்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் நமது அட்டையில் உள்ள பணத்தில் அதிக பட்ச தூரத்துக்குக் கட்டணம் போய் விடும். எல்லா நிலையங்களிலும் நிற்கும் வண்டிகள் குறைவே. மற்றொரு பதிவில் BART பற்றி எழுதுகிறேன்.
நமது ‘லெவல் கிராசிங்’ எனப்படும் தண்டவாளத்தை சாலை வெட்டும் இடத்தில் இரண்டு பக்கமும் முழுமையாக ஒரு பெரிய இரும்புக் கிராதி போக்குவரத்தை நிறுத்தும். இங்கே ஒவ்வொரு பக்கம் பாதி மட்டுமே மூடப் படும். ஒரு வேளை ஆபத்தான நிலையில் ஒருவரது வாகனம் தண்டவாளத்தைக் கடக்கும் போது பழுதானாலும் எப்படியாவது அதைத் தள்ளிக் கொண்டு போய்த் தப்பிக்க ஏதுவாக இது இருக்கிறது. ஆனால் ரயில்வே ‘லெவல் கிராசிங்’ அடைக்கப் படுவது மூன்று நான்கு நிமிடங்கள் மட்டுமே. அவ்வளவு துல்லியமாகத் தானே இயங்கும் ஒரு அமைப்பு இங்கே இருக்கிறது.
(image 1 courtesy smdailyjournal.com)