BART-கலிபோர்னியாவின் மெட்ரோ
BART (Bay Area Rapid Transit) நாம் சென்னை மற்றும் பல பெரு நகரங்களில் காணும் மெட்ரோ. அது சான் பிரான்ஸிஸ்கோ நகரின் உட்பகுதிகளில் பல இடங்களில் உள்ள அலுவலகங்களில் பணி புரிவோருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் , சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் உதவிகரமானது. கால் டிரெயினுக்கும் BARTக்கும் உள்ள பெரிய வேறுபாடு. கால் டிரெயின் சான் பிரான்சிஸ்கோ நகருக்குள் சென்றாலும் எல்லா இடங்களிலும் இல்லை. BART அப்படி இல்லாமல் பல இடங்களையும் தொடுவது. ‘கிளிப்பர் கார்டு’ லும் பயன்படும் ஆனால் Tag off செய்யாமல் நாம் வெளியே வரும் போது வாயில் திறப்பதற்காகப் பயன்படுத்துவதால் அதிலேயே அந்த வேலை நடந்து விடும்.