கலிபோர்னியா – சான் பிரான்சிஸ்கோவின் Golden Gate Park
Golden Gate Park என்னும் பாலம் பசிபிக் கடலில் சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பக்க எல்லையாக அமைவது. ஆனால் என்னும் இந்தப் பூங்கா அதற்கு அருகே இல்லை. இது அவ்வளவு நெருக்கமாக வளர்ந்த வனத்தின் ஒரு பகுதியும் அல்ல. இரண்டு விஷயங்கள் இங்கே மிகவும் ரசிக்கும் படி இருந்தன. அவர்கள் மலர்களின் பாதுகாப்பு மையமாக வைத்திருக்கும் இடத்தில், இங்கே உள்ள குழந்தைகளுக்கு அபூர்வமான வெப்பமய நாடுகளின் மலர் மற்றும் மரங்களை, கண்ணாடி அறைக்குள் வளர்க்கிறார்கள். வாழை மரமும் இருந்தது. இவர்கள் விஞ்ஞான மையம் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதில் மீன்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் நம் மனதைக் கவரும்.
புகைப் படங்களில் கடலும் அதை ஒட்டிய நிலப்பகுதியுமான பகுதிகள் இங்கே உள்ள ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து எடுக்கப் பட்டவை.