புதிய வீட்டில் நாம் புகைப்படங்கள் மற்றும் கலைப் படங்களை மாட்ட ஆணிகள் அடிக்க வேண்டும் இல்லையா? கலிபோர்னியா வீடுகள் மரத்தால் தான் அமைக்கப் படுபவை. எனவே சிறிய ஆணிகள் அடிக்க எந்தத் தடையும் இல்லை.
புகைப்படங்களில் மஞ்சள் நிறத்தில் நாம் காணும் கருவி நான் முதல் முதலாகக் கண்டது. அதை வைத்துத் தான் அந்த இடத்தில் குடி நீர்க் குழாயோ, மின்சாரம் அல்லது தொலைபேசி இணைப்புக் கம்பிகள் உள்ளடக்கிய குழாயோ, ஆணி அடிக்க விரும்பும் இடத்தில் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்கிறார்கள். பின்னரே அதைப் பயன் படுத்தி அவர்கள் ஆணிகளை அடிக்கிறார்கள். மற்றொரு சாதனம் மட்டம் பார்ப்பது. அது நம்மிடம் உண்டு. ஒரு குண்டு கயிற்றின் அடியில் தொங்கவிடப் பட்டதாக இருக்கும். இது அதே போன்றது ஆனால் சிறிய வடிவில் துல்லியமாகச் செய்வது. நேரம் குறிப்பிட்டு அந்த நேரத்தில் வந்து நிபுணத்துவத்துடன் செய்து முடிக்கிறார்கள்.