காவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது
ஹிந்துத்வா படைகள், சங்க பரிவார் தமது வாயே வலிக்க வலிக்க ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பண்பாட்டு அடிப்படையிலான ஒற்றுமை, மத அடிப்படையிலான ஒருமைப்பாடு, ஹிந்துக்களிடம் மட்டுமே தேச பக்தி உண்டு என்றெல்லாம் எப்படி எப்படி மதங்களுக்குள் துவேஷம் கிளப்ப முடியுமோ அதைச் செய்து வந்தார்கள்.
கடந்த ஒரே வாரத்தில் குடும்ப விஷயங்களுக்காக இரண்டு முறை நான் திருச்சி சென்று வந்தேன். காவிரையைப் பார்க்கும் போது மனம் மிகவும் வேதனைப் படுகிறது. கர்நாடகாவிலிருந்து ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் மிகவும் அதிகம் என்றேன். அது உண்மையே. கன்னட மொழி பேசுவோர் கணிசமாக தமிழ் நாட்டில் உள்ள தலங்களைச் சுற்றி வருவோரே. அவர்களைப் பார்த்து இப்போது ஹிந்துத்வா படைகள் ‘தமிழ் நாட்டில் உள்ள திருத்தலங்கள் பெரும்பான்மைக் காவிரிக் கரையில் தான் உள்ளன. பேசாமல் தண்ணியைத் திறந்து விடுங்கள் – இல்லையேல் தெய்வக் குற்றம் ஆகி விடும்’ என்று சொல்லலாமே.
தீர்வு என்று பார்த்தால், நிரந்தரத் தீர்வு என்று பார்த்தால், இரு மாநில விவசாய, குடி நீர்த் தேவையை வைத்து வருடா வருடம் இந்த விகிதத்தில் பகிர்வோம் என இரண்டு மா நிலமுமே ஒப்புக் கொண்டு நீதி மன்ற மோதலோ அல்லது இதை வைத்து அரசியல் செய்வதோ இரண்டையும் விட்டு விடலாம். நிரந்தரத் தீர்வு வரும்.
மறுபடி ஹிந்துத்வா படைக்குத் திரும்புவோம். ஹிந்துத்வாவாதிகள் ஜாதி பேதம் ஒழிப்பது பற்றியோ , பாலியல் வன்முறையை கண்டிக்கும் விதமாகவோ அல்லது தேச ஒற்றுமைக்காக எல்லா மாநிலங்களும் ஒன்றாய் அமர்ந்து பேசுவது பற்றியோ எல்லாம் வாயைத் திறக்க மாட்டார்கள். பசுமாமிசம் மற்றும் சிறுபான்மையினர் எதிர்ப்பு இந்த அரசியல் தாண்டி அவர்களின் கண்களுக்கு எதுவும் தென்படாது.
இரு மாநில மக்கள் இடையே இன்று தேவை விவசாய அமைப்புக்களின் சந்திப்பால் ஒரு உரையாடலுக்கான துவங்கு புள்ளியே.
The difference between historical fact and imaginative facts is the basis of all the emotional outburst.Cauveri problem is as old asKarikal chola. But the politicians instead of finding a lasting solutions threw the responsibility on the courts and further embitter relations between people who had amicable relations.What about disappearing river beds and tanks.?Thiruvengadam
Pingback: காவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது – TamilBlogs