தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -4
தமது கட்டுரையில் கோபால் ராஜாராம் மூன்று முக்கிய வரலாற்று நிகழ்வுகளைத் தமிழர் வரலாற்றில் முக்கியமானதாகக் காண்கிறார். 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் , 2009- முள்ளி வாய்க்கால் யுத்தம், 2017- ஜல்லிக்கட்டுப் போராட்டம். ஹிந்தி எதிரிப்பு இந்த தேசிய உணர்வு முதலில் வெளிப்பட்ட ஒன்று. இரண்டாவதான முள்ளி வாய்க்கால் யுத்தம் எதிகாலத் தமிழகத்துக்குப் படிப்பினைகள் தருவதாகவும், ஜல்லிக்கட்டுப் போராட்டம் தேசிய உணர்வு பூரணமாக வெளிப்பட்ட ஒன்றாகவும் அவரால் வரிசைப் படுத்தப் படுகின்றன. தலித் எழுச்சி மற்றும் விடுதலைப் போராட்டம் தலித்துகளுக்குள்ளே இருக்கும் ஜாதி பிரிவினைகளுள் சிக்கிக் கொண்டது என்றும் அவர் கருதுகிறார்.
மூன்று போராடங்களிலும் காணப்பட்ட எழுச்சி அதன் வீச்சு இவற்றைப் பயன்படுத்தி தமிழகம் ஏன் அறிவு மற்றும் சமூகத் தளங்களில் ஒரு பாய்ச்சல் உடன் முன்னேற இயலவில்லை ? வாசிப்பு வழி குறைந்த பட்சம் தமிழ் வரலாறு பற்றியாவது இளைஞருக்கு அறிவு இருந்திருந்தால் சரியான திசையில் அடுத்த தலைமுறையாவது போயிருக்கும். கோபால் ராஜாராம் அதிகம் விமர்சிக்காமல் எழுதியிருக்கிறார்.
(image courtesy:scroll.in)