அமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு
தேன்மொழி சௌந்தரராஜன் என்னும் இளைஞர் அமெரிக்காவிலும் நாம் ஜாதி பார்க்கிறோம். ஆசிய மக்களிடையே இது இருக்கிறது என்னும் கள ஆய்வு முடிவுகளை ஒட்டி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்துள்ளார். அதற்கான இணைப்பு ———————— இது.
நான் இதுவரை மூன்று மாதங்களே அமெரிக்காவில் இருந்திருக்கிறேன். இதை உறுதி செய்வது எனக்கு இயலாத ஒன்றே. அங்கே உள்ள வழிபாட்டுத் தலங்கள் எதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. வாழும் இடங்களில் பிரச்சனை வர வாய்ப்பே இல்லை. அமெரிக்காவில் நீங்கள் சத்தம் வராமல் உங்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டும். எனவே ஒரே வாய்ப்புப் பணி இடம் மட்டுமே. தேன்மொழியும் அதைத்தான் குறிப்பிடுகிறார். எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம் இனம் மற்றும் தன் நாட்டு மக்களுக்கு உதவும் அடிப்படையில் சீனர்கள் பற்றி நிறையவே புகார் உண்டு. சீனர்களும் மெக்ஸிகோ மக்களும் மட்டுமே உடலுழைப்பு வேலைகள் செய்பவர்கள். இந்தியர்கள் யாரும் அப்படி இல்லை. மெக்ஸிகோ மக்களின் சொந்த நாடு கலிபோர்னியா, நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு.
மற்றொன்றைக் குறிப்பிட்டே இதை முடிக்க வேண்டும். மொழி வாரியாக நாம் அங்கே பிரிந்தே இருக்கிறோம். பல அமைப்புகள் மொழிவாரியானவையே. மொழி பேதம் பார்க்கும் போது ஜாதி பேதம் பார்க்காமல் நாம் விட்டு விடுவோமா என்ன?
இந்தியாவின் பெயருடன் ஜாதி முறையே சேர்த்து, பள்ளிக்கூட வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இருப்பதைத் இந்தியா என வரும் இடங்களில் தெற்கு ஆசியா என மாற்ற வேண்டும் என ஒரு குழு முனைந்து தோற்றது என்னும் செய்திக்கான இணைப்பு ——————— இது.
(image courtesy:thewire.in)