வாழ்க்கையின் ரகசியம்-5
கொண்டாட்டங்கள் அடையாளப் படுத்துவோர்
கொண்டாட்டத்தைத் தானே ஏற்பாடு செய்பவராக அல்லது பிறர் ஒழுங்கு செய்யும் போது ஒரு விருந்தாளியாக இரண்டில் யாராக இருந்தாலும் எக்கச்சக்கமான ஆர்வத்தைக் காட்டுபவருக்கு முதன்மையான ஒரு இடம் சமூகத்தில் உண்டு. கொண்டாட்டத்தில் இருக்கும் ஆர்வம் ஒருவரை சமூகத்தில் அவரின் இடத்தைத் தானே பெற்றுத் தரும். ஏனெனில் ஒருவர் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் போதே சமூகத்தை அங்கீகரித்து விட்டார். அங்கே தன் வயது, வருமானம், அந்தஸ்து, ஜாதிக்கு நிகரானவர்களோடு அளவளாவும் போது ஒரு பரஸ்பர மரியாதைப் பரிமாற்றம் நிகழ்ந்து விடுகிறது. நாம் கொண்டாட்டங்கள் இல்லாத தனி நபர் சந்திப்புக்களை அனேகமாகக் காண முடியாது. ஏனெனில் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக் உரையாடி இன்று ஆக வேண்டியது எதுவுமில்லை. நமக்கு அறிமுகமான ஒருவர் நடத்தும் கொண்டாட்டத்துக்கு நாம் போகும் போது பல தொடர்புகள் கிடைக்கும். அவர்களுள் சிலர் மேலும் பல கூடுதல்களுக்கு நம்மை அழைக்க நம் வட்டம் விரிவடையும்.
அலுவலகம் அல்லது சமூகம் இவை இரண்டிலும் ஒரு கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்து அதற்காககச் கெலவு செய்து அதை நடத்த முன் வரும் போதே ஒரு ஆள் சாதாரண மக்களின் சகஜ நிலையை அங்கீகரிப்பவர் ஆகிறார். யாரோடும் ஒட்டாதவர் இல்லை தான் என்பதை அறிவித்ததற்கு இணையாகும் சமூகம் என்பது மிகவும் பெரியது. அதுவும் நீங்கள் சமத்துவத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர் என்றால் நம்ப முடியாத அளவுக்குப் பெரியது. ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது சமூகத்தின் துண்டுகள் பற்றியே. ஒன்றுக்கும் மேற்பட்ட துண்டுகளுக்குள் நம் அடையாளம் ஒளிந்திருக்கலாம். அல்லது பல துண்டுகளைச் சேர்க்கும் போதே நம் அடையாளம் முழுமை பெறலாம்.
எனவே கொண்டாட்ட நாட்களில் கொண்டாடி, இரண்டு கொண்டாட்டங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் கொண்டாட்டத்துக்குத் தகுதி உள்ளவராக நம்மை நிலை நிறுத்திக் கொள்வதே நாம் வாழ்க்கை பற்றிய ரகசியத்தின் சமூக மன நிலை பற்றித் தெரிந்து கொள்வது சமூக மன நிலையைப் புரிந்து கொள்ளும் அளவு சமூகம் நம்மை அங்கீகரிகிறது.
மேலும் சிந்திப்போம்
(image courtesy:pingfree.com)