கொண்டாட வாய்ப்பில்லாதோர் – வழியில்லாதோர் -6
கொண்டாட்டங்களின் அவசியத்தை சமூகத்தின் பெரும்பான்மை உணர்ந்தே இருக்கிறது. அதன் மறுபக்கமே யார் யாருக்குக் கொண்டாட வாய்ப்பில்லை. யார் யாருக்கு வாய்ப்பிருந்தும் வழியில்லை என்பது . எனவே தொடர்புகள் உறுதிப் படும் ஒரு கொண்டாட்டத்துக்கு அதை ஒழுங்கு செய்வதற்கு அடிப்படைத் தேவை தொடர்புகள் இருப்பது தொடர்புகள் இருக்கிற ஒரு ஆள் மட்டுமே ஒரு கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்ய முடியும். பிறருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடையாது. அடிப்படையில் எந்த அன்றாட செயற்பாடுகள் பணத்தை சம்பாதிக்கத் தேவையோ அந்த செயற்பாடுகளை செய்யும் வாணிகம், தொழில் அல்லது சமூக அந்தஸ்துள்ள அரசுப் பதவி அல்லது அரசியல் தொடர்பான வேலையில் நிறைய தொடர்புகளைப் பெற்றவருக்கே தகுதி உண்டு. அந்தத் தகுதிக்குள் வராதவருக்கு அது கிடையாது.
வழியில்லாதோர் என்னும் வளையத்துக்குள் பணி செய்தாலும் வருமானத்தால் அல்லது ஜாதி அடிப்படையில் பின் தங்கியவருக்கு அனேகமாக ஒரு பொதுவான கொண்ட்டாட்டத்தை ஒழுங்கு செய்ய வழி கிடையாது. தொடர்புகளும் அனேகமாக இருக்காது. அப்படியும் அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளும் பண்புடையவர் என்றாலும் இந்த சமூக ஒழுங்கு வளையத்துக்குள் அவர் வர மாட்டார்.
பரிசு- பதில் பரிசு, மரியாதை – எதிர் மரியாதை, உதவி – பிரதி உதவி, தொடர்புகள் பகிர்தல், சமூக அந்தஸ்து, வணிகம், அல்லது முக்கியத்துவமுள்ளோர் அறிமுகம் இப்படி பல உதவிகளை அல்லது கொடுக்கல் வாங்கல்களைப் பகிராமல் சமூக இயங்குதல் என்று ஒன்று இல்லை. அந்த கொடுக்கல் வாங்கல் வளையத்துக்குள் வராதோர் வாய்ப்பில்லாதோர். அந்த வளையத்துக்குள் இருந்தும் அதன் சுழற்சி புரியாமல் ஒதுங்கி நிற்போரும் வழியில்லாதோரே.
வாழ்க்கையின் ரகசியம் பொருளை மட்டுமல்ல செல்வாக்கு மற்றும் (தற்காலிக) கூட்டாளிகளைத் தேடுவதும் தக்க வைப்பதும் இந்த இடத்தில் நிறையவே தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது
மேலும் சிந்திப்போம்
(image courtesy:whatsuplife.in)