வாழ்க்கையின் ரகசியம் -11


Image result for breaking chains images

வாழ்க்கையின் ரகசியம் -11

கனவு உலகின் மகத்துவம் உணர்ந்தவர்கள்

உலகின் இன்றைய வளம் அல்லது நமது சொத்தாக நாம் பெருமைப் படக் கூடியது என்பது நமது பண்பாடு மற்றும் வளம் பெறப் பாடுபட்டோரின் உதாரண்ங்களே. சுயநலம், உடனடி லாபம் இவை மட்டுமே மனித இனத்தை ஆட்டி வைத்ததே வரலாறு. இன்றும் அது மாறவில்லை. ஆனால் அவற்றை மீறி, அதற்கு அப்பாற் பட்டு, இன்னும் மேம்பட்ட உலகம் இன்னும் மேம்பட்ட மனித வாழ்க்கை இன்னும் மேம்பட்ட வருங்காலத் தலைமுறையினர் எனக் கனவு கண்டோர் மட்டுமே அவர்களின் வாழ்க்கைத் தடம் மட்டுமே என்றும் நமக்கு நன்னமிக்கையும் ஊக்கமும் உந்துதலும் தருபவை.
கலை, இலக்கியம், அறிவியல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தொழில் நுட்பம், விவசாயம், ஆன்மீகம் என எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்தவர்கள் பெயர்களே நமக்குத் தெரியாது. ஆனால் தொடர்ந்து இந்தத் துறைகள் மீது மாறாக் காதல் கொண்டு அதில் புதிய தடங்கள் மற்றும் மேம்பட்ட மாற்றங்களுக்காகக் கனவு கண்டோர் மட்டுமே புதியோரை அந்தத் துறைகளுக்கு ஈர்த்தனர். அவர்களது கனவுகள் தொடர்ச்சியான முயற்சிகளை மென்மேலும் அந்தத் துறைகளைக் காதலிப்போரை உருவாக்கின. அவர்கள் எல்லோருக்கும் பொதுவானது கனவு. காரிருளுக்கு நடுவே வெளிச்சம் பற்றி, பாலைவனப் பயணத்தினூடே சோலைகள் பற்றி, குற்றங்கள் மற்றும் கொள்ளை அடிக்கும் பேராசையின் அனலுக்கு இடையே தாகம் தீர்க்கும் ஜீவ நதி பற்றிய கனவுகள்.
கவிதைகளாய், ஓவியங்களாய், கதைகளாய், புதிய விஞ்ஞான தொழில் நுட்ப சிந்தனைகளாய் அவை வெளிப்பட்டன. இன்றும் தம்மை முழுக்க முழுக்க தனது கனவுகளுக்கு அர்ப்பணித்த்து அயராது பணி புரிவோர் இருக்கிறார்கள்.
கனவுகள் மட்டுமே மானுடம் இன்னும் இன்னும் மென்மேலும் தனது சிந்தனையில் பாதையில் மிளிர்ந்து நடக்க உந்துகிறது. சமுதாயம் மாற வேண்டும் என்னும் கனவில் இவர்கள் செய்த முயற்சிகள் கோடி என்றால் சாதனைகள் நூறாக இருக்கலாம். ஆனால் ஒரு விளக்கு மற்றொரு சுடரை ஏற்றுவது போல புதிய புதிய ஆர்வலர்களை அவர்களது கனவுகள் காந்தமாக ஈர்த்தன.
கனவு என்பது சுதந்திரமான ஒரு மனத்துக்கு விடுதலை பெற்ற ஒரு சிந்தனைக்கு மட்டுமே சாத்தியம். நம்மைப் பிணைத்துப் பின்னிழுக்கும் சங்கிலிகள் கனவுகள் முன் தூளாகின்றன.
தன் மீது வீசப்பட்ட கற்களை அல்லது தன்னை கவனிக்காமலேயே நிராகரித்த அவமதிப்பை அவர்கள் சட்டை செய்யவே இல்லை. தனது வலியைத் தாண்டி மானுடமே வலியை வெல்லும் வலிமையைக் கனவு கண்ட தலைவர்களே இன்று நலிந்தோரைக் காக்கும் சட்டங்களுக்கு விதைகளாயிருந்தவர்கள்.
பொருளும் சுகமும் பகட்டும் காட்டும் வெறுமையைத் தாண்டி உண்மையான மன நிம்மதி மற்றும் ஆனந்தம் ஆன்மீகக் கனவுகளைச் சுமந்த மகான்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து.
ஐநூறு வார்த்தைகளைத் தாண்டாத உரையாடல் மற்றும் புரிதலுடன் தேக்கம் பெற்ற மானுடத்தை சொற்களே சங்கிலிகளை உடைக்கும் கூர் உளிகள் எனத் தம் எழுத்தால் வரைந்த கவிஞர்களும் படைப்பாளிகளுமே இன்றும் நாம் வாழ்க்கை பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு தடம் காட்டியவர்கள்.
சிற்பம், ஓவியம், நடனம் என நம் மிருகங்களை விட நாம் கலைகளாலேயே மேம்பட்டவர் எனக் காட்டிய கலைஞர்களின் கனவே ரசிப்பின் வழி மனம் விடுதலை பெற்று சுதந்திரமான மற்றும் புத்தம் புதிய சிந்தனைகளுக்கு நம்மை இட்டுச் சென்றது.
அனுபவம் என்பது மனம் சார்ந்தது. மனத்தின் ஒப்பற்ற ஆற்றல் சிந்தனையிலும், சிந்தனையின் ஆகச் சுதந்திரமான நிலையான கனவிலும் மட்டுமே வெளிப்படுவது.
அவர்களின் தாக்கத்தின் அல்லது அவர்களால் நாம் பெற்ற கண்ணுக்குத் தெரியாத மாற்றத்தின் தன்மை என்ன?
மேலும் சிந்திப்போம்.

(image courtesy:wingsoffreedom.net)

 

 

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s