மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை
உணவு உடை உறையுள் என்று எளிதாகச் சொல்லி விடலாம் இல்லையா? ஆனால் அது அப்படி இல்லை. இவற்றைத் தாண்டித் தான் மனித வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்புகள் விரிகின்றன.
கனவின் வீச்சை கனவின் மகத்துவம் புரிந்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். கனவு இல்லையேல் மாற்றமில்லை. மாற்றமில்லாத வாழ்க்கையில், மேம்படாத வாழ்க்கையில் எந்த சாதனையுமில்லை.
கனவுகளே சாதனைகளுக்கு, மேம்பட்ட வாழ்க்கைக்கு, சுதந்திர சிந்தனைக்கு விதைகள் ஆகின்றன. சாத்தியங்கள் புதிய தடங்கள் தென்படும் போது மனிதனுள் மறைந்திருக்கும் புதிய ஆற்றல், திறமை மற்றும் கற்பனைகள் வெளிப்படுகின்றன. புதிய வாயில்கள் திறக்கின்றன. புதிய தடங்கள் புதிய வாயில்கள் புதிய சாளரங்கள் புதிய காற்று இவை இல்லாமல் புதிய உலகம் இல்லை.
மாற்றம் முன்னேற்றம் புதுமை மற்றும் புதுமை இவைகளே மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை. அந்தத் தேவையே உள்ளார்ந்து மனிதனைக் கனவு காண வைக்கிறது. புதிய சாதனைகளை நோக்கி உந்துகிறது.
பொருள் சேர்க்கை அ;ல்லது புலன் சுகம் அல்லது கொண்ட்டாட்டங்கள் மனிதனின் இந்த ஆழ்ந்த தேவையை நிறைவு செய்வதே இல்லை. தன் தேவை இவற்றுக்கும் அப்பாற் பட்டது இவற்றிலும் உயிர்ப்புள்ளது என்னும் விழிப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
கனவும் அதைத் தொடர்வதும் இந்த விழிப்பில் மட்டுமே நிகழ்கின்றன. ஆராவாரக் கும்பலோடோ அல்லது கொண்டாடங்களிலோ தென்படாத சாதனையாளன் தன் கனவில் நிறைவு காண்கிறான். அதன் வழிகாட்டுதலில் மேலும் செல்கிறான்.
அவனது கனவு அவனது முயற்சி இரண்டுமே மேலும் பலரை ஈர்க்கின்றன. ஆனால் சாதனைகள் மட்டுமே பெரிய அளவில் மக்களிடம் சென்று சேருகிறது.
செல்வமும் செல்வாக்கும் தானே எங்கும் செல்லு படியாகிறது. கனவும் அதைத் துரத்துபவனும் யாருக்குத் தென்படுகின்றனர் என்ற கேள்விகள் எழுவது இயல்பானதே.
செல்வமும் செல்வாக்கும் தோற்கும் இடங்கள் எவை?
மேலும் சிந்திப்போம்
(image courtesy:ptbump.com)