சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2


Image result for social media emblems images

சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2

சமூக ஊடகம் பற்றிய பல சிக்கல்களில் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என முதல் பகுதியில் குறிப்பிட்டேன். அந்த சிக்கல்களைப் பட்டியலிடுவதே கடினம். பெரிய சிக்கல் அதன் துணைச் சிக்கல் என அது நீண்டு கொண்டே போகும். எனவே என்னை பாதித்த அல்ல நான் நேரடியாக சந்திக்கிற சிக்கல்களை ஒவ்வொன்றாக நாம் விவாதிப்பது சரியாக இருக்கும்.

நாம் சந்திக்கின்ற சிக்கல்களுள் தலையானது நம்பகத் தன்மை இன்மை என்றே நான் கருதுகிறேன். அனேகமாக நம் கைபேசி அல்லது கணிப்பொறிக்குள் வந்து விழும் ஒரு செய்தி, தகவல் அல்லது காணொளி எந்த அளவு நம்பத் தகுந்தது என்பதே பெரிய சிக்கல். உண்மையில் ஒருவர் அவற்றின் மெய்த் தன்மை அல்லது நம்பகத் தன்மையை சரிபார்க்கத் துவங்கினால் அனேகமாக அவர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகளுக்கு மேல் யாருடனும் பகிரவே இயலாது.

என்னை மிகவும் மதிக்கிற மற்றும் விரும்புகிற பள்ளி நண்பர்கள் குழு ஒன்றே என் கண்களைத் திறந்தார்கள். எனக்கு நல்லது இது அல்லது வியத்தகு காணொளி இது எனத் தோன்றிய எதையுமே நான் பகிரத் துவங்கி இருந்தேன் சில காலம் முன் வரை. மெதுவாக மிகவும் நாசூக்காக அவற்றின் நம்பகத் தன்மை குறைவு என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இப்போதெல்லாம் அனேகமாக நான் எதையுமே பிறருக்கு அனுப்பி வைக்கும் விளையாட்டுக்கே போவதில்லை. காலை வணக்கத்துடன் எதாவது பொன் மொழியோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நம்பகத் தன்மையற்ற அல்லது பொய்யான ஒன்றை நாம் வாகனமாகி அனுப்பி விடும் போது நம் பிம்பமும் நசுங்கி விடவே செய்கிறது. இதில் ஐயமே இல்லை. மறுபக்கம் நம்மை நம்பி அவர் மற்றவருக்கும் அனுப்பி வைக்க அது அவருக்கும் தர்ம சங்கடத்தையே தருகிறது.

போலிகளும், பொய்களும் எப்போதுமே மிகவும் கவர்ச்சியானவை. மக்களுக்கு அவை ஆவலைத் தூண்டுபவை. எனது கட்டுரைகளில் பல சமயம் நான் ஊடகங்களைச் சாடு சாடு எனச் சாடி இருக்கிறேன். இன்று தவறான, பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான விஷயங்களை ஊடகங்கள் வெளியிட முன்னெப்போதையும் விடத் தயங்குகின்றன. ஆனால் தனி நபர்கள் மிகவும் உற்சாகமாக, தான் எதை வாகனமாகிக் கொண்டு போகிறோம் என்றறியாமல் பகிர்ந்து கொண்டே போகிறார்கள்.

மெல்ல மெல்ல நாம் நம்பகத் தன்மையில்லாத ஒரு சமூக அறிவு வெளிக்குள் தள்ளப் பட்டிருக்கிறோம். இதற்கு ஒரு மாற்று கண்டிப்பாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. முதலில் நாம் நமக்கு வரும் பகிர்வுகள் அனைத்தையும் வாசிப்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டியதே இல்லை. ஏனெனில் அதைத் தவிர வேறு வேலையே செய்ய முடியாது. அடுத்து நாம் நமக்கு ஏற்கனவே ஈடுபாடு இருக்கும் ஒரு தலைப்பை ஒட்டிய செய்திகளை மட்டும் பின் தொடரலாம். மதம் பெரிய ஈடுபாட்டுப் புள்ளியாகத் தெரிகிறது. அடுத்து சுற்றுச் சூழல், சுற்றுலாத் தலங்கள் பற்றியவை என ஒரு சிறிய பட்டியல் மட்டுமே நாம் போட முடியும்.

வம்பு அல்லது வதந்தி தரும் பரபரப்பின் பின்னே செல்லுவது பெரிய வியாதியாகி விடுகிறது. அதை நாம் சுய பரிசீலனை செய்து கொண்டு தவிர்க்கவில்லை என்றால் அதுவே நம் தரத்தைத் தாழ்த்தி விடும் பெரிய அபாயம் நம் முன்னே நிற்கிறது.

நம்பகத் தன்மையற்றவற்றை நாம் பகிரவும் மற்றும் வம்பு வதந்திகளில் ஆர்வம் காட்டவும் பழகி விட்ட ஒரே ஒரு காரணத்தால் பல சமூகக் கூடுதல்களில் பரஸ்பர விசாரிப்பு மற்றும் அன்பு காட்டுதல் என்னும் நேயம் மிக்க பகிர்தல்கள் நிகழாமலேயே போய் விடுகின்றன. கையில் கிடைத்ததை வைத்து எதையோ பேசும் அரை வேக்காட்டுச் சூழலில் நாம் அனேகமாக மாட்டிக் கொள்கிறோம். குடும்பம் மற்றும் உறவுகள் சந்திப்புகளை இது பெரிய அளவு நீர்க்கடித்தது சோகம்.

அடுத்த சிக்கலை அடுத்த பகுதியில் காண்போம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2

  1. Pingback: சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2 – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s