தினமணி நாளிதழின் தொல்லியல் மணி பகுதியில் தர்மபுரி நடுகற்கள் பற்றிப் பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. சற்று தாமதமாகவே அவர்களது இணைய தளத்தில் படித்தேன். தர்மபுரியில் சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணுக்கு உற்றாரோ அல்லது ஊரோ எந்த மரியாதையும் ஆதரவும் தரவில்லை. அவர் இறுதியில் தம் தலையைத் தந்து சிவன் மீதான பக்தியை நிரூபித்து உயிர் நீக்கிறார். அவர் பற்றிய கட்டுரை அவர் சைவ மரபில் ஆண்டாள் போன்றவர் என்றே காட்டுகிறது. அவர் பெயர் தெரியவில்லை. தர்மபுரியில் பல நடு கற்கள் கிடைத்துள்ளன. அவை பற்றி சில கட்டுரைகளும் தினமணியில் வந்திருக்கின்றன. இந்த நடுகல் பற்றிய கட்டுரைக்கான இணைப்பு ———- இது.
நமக்கு அச்சு வடிவில் இருக்கும் சரித்திரத்தின் நம்பகத் தன்மை பலராலும் கேள்விக்கு ஆக்கப் பட்டதே. ஓசூர் நடு கற்கள் இன்னும் இன்னும் கண்டு பிடிக்கப் பட்டு வருகின்றன. அவற்றின் விவரங்கள் காலப் போக்கில் தெரிய வரலாம். வரலாற்றை நாம் வறட்டுப் பெருமைக்கென மட்டுமே அணுகுவதால் நம்மால் ஆழ இயலவில்லை. வரலாறு நமக்கு இன்ப அதிர்ச்சி அதற்கு எதிர்மறையான அதிர்ச்சி எல்லாவற்றையும் வைத்திருக்கக் கூடும்.
(புகைப் படம் நன்றி: மாலை மலர்)