சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பணி புரிந்த அலுவலகத்துக்கு மிக அருகில் சித்தனின் யுகமாயினி வெளி வந்த சிறிய அலுவலகம் இருந்தது. அந்த இதழில் வந்த கம்யூனிசக் கோட்பாட்டை ஒட்டிய படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவருடன் அடிக்கடி சந்திப்பும் நிகழ்ந்தது. அரிதாய் நான் யுகமாயினி இதழில் எழுதவும் செய்தேன். பழக மிக எளியவர். திரைப்படம் அல்லது தொலைக் காட்சி இரண்டுள் ஏதோ ஒன்று அவரை கவ்விக் கொள்ள பலியானது யுகமாயினி. அது எனக்கு மிகவும் வருத்தம். ஆனாலும் அவருடன் நான் தொடர்பில் இருந்து வந்தேன். என் பணி இட மாற்றம் காரணமாக அவருடனான தொடர்பு மிகவும் குறைந்து ஒரு நிலையில் நின்று விட்டது. அவருக்கு இலக்கியம் மற்றும் காட்சி ஊடகம் இரண்டிலும் தீவிரமாக இயங்கும் முனைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தன. கம்யூனிஸம் பற்றிய சரியான புரிதல் அவருக்கு இருந்தது. அவருக்கு என் அஞ்சலி.
(புகைப்படத்துக்கு நன்றி: ஜெயமோகன் இணைய தளம்)