தமிழ் நாடகம் பரிட்சைகள், புதுமைகள் மற்றும் செம்மைகளுடன் புதிய தடத்தில் கால் பதிக்க வைத்தவர் ந. முத்துசாமி. அவரது கூத்துப் பட்டறை அமைப்பின் படுகளம் என்னும் நாடகத்தை நான் டெல்லி சங்கீத் நாடக அகாதமியில் வைத்துப் பார்த்தேன். அவரை சந்தித்ததும் அப்போது மட்டுமே. அவருக்கு நாடகம் என்பதன் சாத்தியங்கள் பற்றிய புரிதல் மற்றும் அதில் புதியன செய்யும் முனைப்பும் அதை நிறைவேற்றி முன்னோடி ஆகும் கலையும் இருந்தன. மிகப் பெரிய இழப்பு தமிழ் நாடகம் மற்றும் தமிழ் நாட்டுக்கு. அவருக்கு என் அஞ்சலி.
(புகைப்டம்:ச்ருதி.காம்)